தூத்துக்குடி ஏப்ரல் 14
தாளமுத்து நகர் ஆர்.சி.பள்ளி 39வது ஆண்டுவிழா , வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் மாப்பிள்ளை யூரணி ஊராட்சித்தலைவர் சரவணக்குமார் , தூத்துக்குடி டவுன் டிஎஸ்பி சத்தியராஜ் , துணை ஆட்சியர் பிரபு ஆகியோர் பங்கேற்றனர்.
பள்ளியின் 39 வது பள்ளி ஆண்டு விழாவிற்கு
ஆர்.சி பள்ளி தாளாளர் நெல்சன் ராஜ் தலைமை தாங்கினார். பள்ளி வளாகத்தில் வைத்து நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஆர்.சி. நடுநிலைப்பள்ளி ஆசிரியை வரவேற்று பேசினார்.
பள்ளி தலைமை ஆசிரியர் வின்சென்ட் ஆண்டறிக்கை வாசித்தார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளும், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு நிகழ்வும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவர் சரவணகுமார் பேசியதாவது
மாணவ மாணவியர்கள்
ஆசிரியரிடம் நல்லொழுக்கத்தை கற்று பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கீழ்படிந்து ஒழுக்கமுள்ள மாணவர்களாக திகழ வேண்டும் சிறந்த கல்விகள் கற்று சமுதாயத்தில் உயர் அதிகாரிகளாகவும், சிறந்த அறிஞர் அறிஞர்களாகவும் உருவாக வேண்டும்
மாணவ மாணவியர்களின் நலனில் தனி அக்கறை கொண்டு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறார் இதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொண்டு உங்களது அறிவாற்றல்களை வளர்க்க வேண்டும் என பஞ்சாயத்து தலைவர் பேசினார்.
இதனைத் தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற டவுன் டிஎஸ்பி சத்யராஜ் பேசுகையில் அவர் கூறியதாவது எனக்கு இந்த ஆண்டு விழாவில் கலந்து கொண்டது எனது பள்ளி நாட்களை அசை போட வைக்கின்றது. அதற்கு பள்ளி நிர்வாகத்திற்கு நன்றி. காரணம் அரசு பள்ளிக்கூடங்களிலும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களிலும் படித்து இருக்கின்றேன். இன்றைக்கு இந்த நிலைமைக்கு வந்திருக்கிறேன். அதேபோல நீங்களும் வாழ்க்கையில் நன்கு படித்து ஒழுக்கமாய் வாழ வேண்டும் என்றும் ஆசிரியர்களை நாம் மதிக்க வேண்டும் கீழ்ப்படிதல் வேண்டும், ஆசிரியர்கள் நமக்கு நல்லதை தான் செய்வார்கள், அவர்களை நாம் ஒரு காலத்தில் தொழுதுண்டு வாழ்ந்தார்கள், அந்த வகையில் ஆசிரியர்களை மதித்து அவர்கள் சொல்ப்படி நடக்க வேண்டும் என்றும் கூறினார். ஒரு சில இடங்களில் ஆசிரியர்களை அவமரியாதையாக பயன்படுத்தி அடித்து பல்வேறு சித்தரவதைக்கு உள்ளாக்குகிறார்கள் அந்த நிலைமை தவிர்க்கப்பட வேண்டும் என்று அவர் பேசினார்.
துணை ஆட்சியர் பிரபு பேசுகையில்.. பள்ளிக்கூடங்கள் நல்ல மாணவர்களை உருவாக்குகிறது அதற்கு ஆசிரியர்கள் தூண்டுகோலாக இருக்கிறார்கள். ஆசிரியர்களை மதிக்க வேண்டும், வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்று சொன்னால் ஒழுக்கமாக இருக்க வேண்டும், வாழ்க்கையில் நல்ல சிந்தனைகளை நாம் கற்றுக் கொள்ள வேண்டும், அப்பொழுதுதான் வாழ்க்கையில் வளமாக வாழ முடியும் நாங்கள் இந்த நிலைமைக்கு வருவதற்கு அரசு பள்ளிக்கூடங்களும் ஒரு காரணமாகும் இவ்வாறு அவர் பேசினார்,
அருட்தந்தை நெல்சன் ராஜ் பேசுகையில் அவர் கூறியதாவது… நான் பார்த்த வகையில் இதுவரை இப்படி ஒரு பஞ்சாயத்து தலைவரை பார்த்ததே கிடையாது, காரணம் என்ன சொன்னாலும் அதை முழுமையாக செய்து கொடுக்கின்றார். சிறந்த பஞ்சாயத்து தலைவர் இவர் ஒருவரே, மாணவர்கள் மாணவர்களாக இருக்க வேண்டும், பெற்றோர்கள், மாணவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டும், ஒரு சில பெற்றோர்கள் குழந்தைகளை மதிப்பது கிடையாது, குழந்தைகள் பேசினால் கேட்பது கிடையாது. ஆகையால் குழந்தைகள் பேசினால் அவர்களுக்கு கொஞ்சம் காது கொடுத்து கேளுங்கள், குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும், என்று சொன்னால் பெற்றோர்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும், இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்வில் ஊராட்சி உறுப்பினர்கள் பாரதிராஜா தங்கமாரிமுத்து,முன்னாள் கவுன்சிலர் ஆனந்தகுமார் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஏ. அலெக்ஸ், மரிய அடைக்கலம் ஊர் பொறுப்பாளர்கள் எஸ். வியாகுல முத்து, எஸ். அற்புதராஜ், லா. அமல், அந்தோணி, தங்கராஜ் மற்றும் ஆசிரிய பெருமக்கள், மாணவ மாணவிகள், பெற்றோர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

