தூத்துக்குடி அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிற்கிணங்க தூத்துக்குடி மாநகரம் 8வது வார்டு திரேஸ்புரம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர்பந்தலை திறந்து வைத்து தர்பூசணி, இளநீர், பதநீர், லட்டு, உள்ளிட்ட பல்வேறு குளிர்பானங்கள் பொதுமக்களுக்கு அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் வழங்கினார்.

நிகழ்ச்சியில் தலைமை பேச்சாளர் கருணாநிதி, வடக்கு மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலாளர் ஜீவா பாண்டியன், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், மத்திய தெற்கு பகுதி அவைத்தலைவர் வக்கீல் குமார், வட்ட செயலாளர்கள் ராஜா, துரைசிங், அந்தோனிராஜ், முன்னாள் மாவட்ட மீனவரணி இணை செயலாளர் துரைப்பாண்டியன், மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் ஞானபுஷ்பம், முன்னாள் கவுன்சிலர்கள் ஜெயக்குமார், சகாயராஜ், மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் சிவசுப்பிரமணியன், இயக்குனர்கள் அன்புலிங்கம், பாலசுப்ரமணியன், திருமணி அம்மாள், முன்னாள் மாவட்ட பிரதிநிதி அசரியான், சிறுபான்மை பிரிவு அசன், முன்னாள் வட்ட செயலாளர்கள் கெய்னஸ் அன்புலிங்கம், அசோக், கருப்பசாமி, சங்கர், ஸ்டாலின், மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

