நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்
டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.
நாகப்பட்டினம் ஏப்ரல் 11
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.
வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மொத்தம் 231 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.அதனைத்தொடர்ந்து வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் கீழையூர் ஊராட்சி ஒன்றியம் திருக்குவளை தாலுக்காவைச் சேர்ந்த அம்பேத்கார் த/பெ ஆறுமுகம் என்பவருக்கு அளிக்கப்பட்ட மனுவிற்கு உடனடி தீர்வாக மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டையினை மற்றும் ஊன்றுகோளையும், பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் நாகூர் சம்பாத்தோட்டைத்தைச் சேர்ந்த செல்லம்மாள் க/பெ சுந்தராஜ் என்பவரின் மகன் குளத்தில் மூழ்கி இறந்தமைக்காக மாண்புமிகு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வரப்பெற்ற ரூ.1,00,000 க்கான காசோலையினையும், சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் பெருங்கடம்பனூர் கிராமத்தைச் சேர்ந்த மீனாட்சி க/பெ ஜோதிபாசு விதவை உதவித்தொகைக்கான ஆணையினையும், தேமங்கலம் ஊராட்சி கொத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மாசிலாமணி த/பெ தையான் என்பவக்கு மாவட்ட ஆட்சியரின் தன் விருப்ப நிதியிலிருந்து நகரும் சிற்றுண்டி கடை தள்ளுவண்டியினையும், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் சம்பாத்தோட்டம் பகுதியில் 12 பயனாளிகளுக்கு குடியிருப்பு ஆணையினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வி.ஷகிலா, சமூக பாதுகாப்பு துணை ஆட்சியர் கு.ராஜன், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது) ராமன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வ.சீனிவாசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

