தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பால்வளத்துறை சார்பில் புதிய ஆவின் பாலகம் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மாநகராட்சி பகுதியான சி;ன்னமணி நகர் பூங்கா அருகில் புதிய ஆவின் பாலகத்தை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்து விற்பனையை தொடங்கி வைத்தார். இதில் பல்வேறு வகையான ஆவின் நிறுவன பொருட்கள் வகைகள் விற்கப்படுகின்றன.
விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி, ஆவின் பொதுமேலாளர் ராஜாகுமார், ஆவின் சேர்மன் சுரேஷ்குமார், மேற்கு மண்டல தலைவர் அன்னலட்சுமி, கவுன்சிலர்கள் பொன்னப்பன், கனகராஜ், எடின்டா, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், திமுக பொதுக்குழு உறுப்பனர் கோட்டுராஜா, மாநில காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் ஏபிசிவி.சண்முகம், மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன், மாவட்ட பொதுச்செயலாளர் கோபால், மண்டலத்தலைவர் சேகர், துணைத்தலைவர் பிரபாகர், நிர்வாகிகள் ராஜன், சின்னகாளை, மாநகராட்சி உதவி ஆணையர் சேகர், சுகாதார ஆய்வாளர் ஸ்டாலின் பாக்கியராஜ், திமுக வட்டச்செயலாளர் சுரேஷ், மற்றும் கருணா, மணி, அல்பட், பாஸ்கர், பிரபாகர், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அனைவருக்கும் கவுன்சிலர் சந்திரபோஸ் நன்றியுரையாற்றினார்.

