தூத்துக்குடி
அதிமுக பாஜகவை சேர்ந்த 200 பேர் திமுகவில் இணைந்தனர். கயத்தாறு கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னப்பாண்டியன் ஏற்பாட்டில் அப்பகுதியை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தொழில்பிரிவு துணைத்தலைவர் மாரியப்பன் நெல்லை அதிமுக மாநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு அவைத்தலைவரும் கயத்தாறு முஸ்ஸீம் ஜமாத் தலைவருமான பீர்முகைதீன் உள்ளிட்டோர் தலைமையில் 200 பேர் எட்டையாபுரம் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட திமுக கலைஞர் அரங்கில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு உரிய உறுப்பினர் சேர்க்கை விண்ணப்படிவத்தை அமைச்சர் கீதாஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளரும் மாநில நெசவாளர் அணி செயலாளருமான பெருமாள் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மருத்துவஅணி அமைப்பாளர் அருண்குமார், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் அருண்சுந்தர், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் ரவி, மற்றும் கருணா, மணி, அல்பட் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

