• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

திமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சூளுரை

policeseithitv by policeseithitv
April 9, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
திமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சூளுரை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுகவிற்குட்பட்ட ஸ்பிக்நகர் பகுதி திமுக சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை தங்கபாரதி, திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பகுதி செயலாளரும் தூத்துக்குடி ஊராட்;சி ஒன்றிய குழு துணைத்தலைவருமான ஆஸ்கர், தலைமை வகித்தார். மாவட்ட கவுன்சிலர் செல்வகுமார், வரவேற்புரையாற்றினார்.

தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில் தமிழக முதலமைச்சர் உத்தரவுபடி இந்த உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெறுகிறது. திமுக உறுப்பினர்களாக ஒன்றரை கோடிபேர் உள்ளனர். அப்போது பலர் பகுதி செயலாளர்களாக வட்டச்செயலாளர்களாக வரவேண்டும். என்ற எண்ணத்தில் சேர்க்கப்பட்டது. இப்போது அனைத்து தரப்பினரையும் சேர்த்து புதிய எழுச்சியை உருவாக்க வேண்டும். என்ற முதலமைச்சரின் உத்தரவிற்கிணங்க இந்த சேர்க்கை நடைபெறுகிறது. கடந்த காலத்தில் பெய்த மழையால் ஏற்பட்ட பாதிப்பின் போது கனிமொழி எம்.பி சண்முகையா எம்.எல்.ஏ நேரடியாக வந்து குறைகளை கேட்டு தீர்த்து வைத்தனர். பல்வேறு உதவிகளையும் மக்களுக்கு செய்தனர். இதையெல்லாம் நீங்கள் எண்ணி பார்க்க வேண்டும். திமுக ஆட்சியில் அதிகமான திட்டங்கள் பெண்களுக்குதான் வழங்கப்பட்டுள்ளது. இந்த இடத்திலும் கூட நீங்கள் தான் அதிகமாக உள்ளீர்கள் அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. உங்களுக்கு பஸ் பாஸ் இலவசம் எந்த திட்டத்தை எடுத்தாலும் உங்களுக்கு தான் முன்னுரிமை வழங்கப்படுகிறது. ஒரு வீட்டில் பெண் கல்வியை படித்து முடித்தால் அந்த குடும்பமே வளர்ச்சியடையும் பெரியார் அண்ணா கொண்டுவந்த பெண்களுக்கான திட்டங்களை கலைஞர் ஆட்சியில் சட்டமாக கொண்டு வந்தார். புதிய உறுப்பினர் சேர்க்கையில் அவர்களது வாக்காளர் அடைய அட்டை அவசியம் இணைக்க வேண்டும் அதே போல் பூத் கமிட்டியிலும் முறையாக தலைமை கழகம் கேட்டுக் கொண்டபடி உண்மையான முகவரியுடன் அதை பூர்த்தி செய்து வழங்க வேண்டும் தவறு இருந்தால் முதலமைச்சர் அதை நீக்கி விடுவார். இன்னும் ஓரு வருட காலத்தில் எம்.பி தேர்தல் வரவுள்ளது. அதற்கு நாம் தயாராக வேண்டும் ஜாதி மதத்தை சொல்லி பிரிவினையை ஏற்படுத்த நினைக்கும் ஒன்றிய அரசின் திட்டம் தமிழகத்தில் நிறைவேறாது இதில் பெரியார் அண்ணா கலைஞர் தளபதி வாழ்ந்த பூமி, மக்கள் பணிதான் மகேசன் பணி என்று முதலமைச்சர் பனியாற்றி வருகிறார். அவருக்கு அனைவரும் துணை நிற்க வேண்டும். என்று பேசினார்.

சண்முகையா எம்.எல்.ஏ பேசுகையில் தொகுதிக்கு 50 ஆயிரம் உறுப்பினர் சேர்க்கை என்ற இலக்கை தெற்கு மாவட்டத்தல் அதை விட கூடுதலாக சேர்ப்போம் 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் எந்த பணியும் நடைபெறவில்லை திமுக ஆட்சி விந்த பின்பு மக்களுக்கான பணிகளும் திட்டங்களும் முறையாக செயல்படுத்தப்படுகின்றன. செப்டம்பர் 15 முதல் மகளிர் உரிமைத்துறை 1000 எல்லோருக்கும் வழங்கப்படும். தமிழகத்திற்காகவும் தொகுதிக்காவும் உழைக்கும் கட்சி திமுக என்பதை யாரும் மறந்து விட வேண்டாம் என்று பேசினார்.

தொகுதி பொறுப்பாளர் முன்னாள் எம்.எல்.ஏவும் மாநில விவசாய அணி துணைச்செயலாளருமாக முருகவேல் பேசுகையில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் 50 ஆயிரம் புதிய உறுப்பினர் சேர்க்கை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதைவிட கூடுதலாக சேர்ப்பார்கள். என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. யார் கூடுதலாக உறுப்பினர் சேர்க்கிறார்களோ அவர்களுக்கு எனது சார்பில் ஒரு பவுன் தங்க மோதிரம் வழங்கப்படும். உள்ளாட்சி தேர்தலில் வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு வரும் கூட்டுறவு தேர்தலில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உங்களுக்கு வாய்ப்பளிப்பார். அனைவரும் உண்மையுடன் நல்ல முறையில் பணியாற்றி உறுப்பினர் சேர்க்கையை முடித்து கொடுக்க வேண்டும் என்று பேசினார்.

பின்னர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புதிய உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் முன்னாள் மாநில மாணவரணி துணைச்செயலாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர்கள் பூங்குமார், ரகுராமன், ஆவின் சேர்மன் சுரேஷ்குமார், கூட்டுறவு வங்கி தலைவர் விபிஆர் சுரேஷ், குலையன்கரிசல் நீர்பாசன விவசாய சங்க தலைவர் ஜெகன், ஒன்றிய துணைச்செயலாளர் ஹரிபாலகிருஷண்ன, வட்டச்செயலாளர்கள் சுப்பிரமணியன், வசந்தி பால்பாண்டி, மைக்கேல், கருப்பசாமி, நிர்வாகிகள் பாலமுருகன், கபடி கந்தன், வக்கீல் கிருபாகரன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

மாப்பிள்ளையூரணி சங்கரபேரி இரு இடங்களில் உயர்மின் கோபுர விளக்கு மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு

Next Post

தூத்துக்குடியில் அதிமுக பாஜகவை சேர்ந்த 200 பேர் அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

Next Post
தூத்துக்குடியில் அதிமுக பாஜகவை சேர்ந்த 200 பேர் அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

தூத்துக்குடியில் அதிமுக பாஜகவை சேர்ந்த 200 பேர் அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In