• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

மாப்பிள்ளையூரணி சங்கரபேரி இரு இடங்களில் உயர்மின் கோபுர விளக்கு மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு

policeseithitv by policeseithitv
April 9, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
மாப்பிள்ளையூரணி சங்கரபேரி இரு இடங்களில் உயர்மின் கோபுர விளக்கு மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பல்வேறு கட்டமைப்புகள் உருவாக்கும் வகையில் புதிய பணிகளும் நடைபெற்று வருகின்றன. 2008ல் 5 ஊராட்சிகளை மாநகராட்சியோடு அப்போது திமுக மாவட்ட செயலாளராக இருந்த பெரியசாமி முயற்சியால் தூத்துக்குடி மாநகராட்சியோடு இணைக்கப்பட்டது. அப்போது முதலமைச்சராக இருந்து கலைஞர் 10வது மாநகராட்சியாக உருவாக்கி கொடுத்தாhர். 51 வார்டுகள் இருந்த பகுதி 2011ல் நடைபெற்ற தேர்தலின் போது 60 வார்டுகளாக உருவாக்கப்பட்டது. மாநகர் பகுதியில் கட்டமைப்பு பணிகள் ஒரளவு நடந்த நிலையில் புறநகர் பகுதியாக இருந்த இடங்களில் வளர்ச்சி பணிகள் சற்று குறைவாகவே இருந்தன. பல்வேறு பகுதிகள் இருளில் சூழ்ந்து பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை இரவு நேரங்களில் இருந்து வந்தன. இதை புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட மேயருக்கு பல்வேறு அமைப்பினர் கோரி;க்கையாக வைத்த நிலையில் மாநகராட்சி கூட்டதிலும் இணைக்கப்பட்ட புதிய பகுதிகளை கட்டமைப்பு பணிகள் செய்ய வேண்டியது நிறைய இருந்து வருகிறது. அவர்களது குறைகளையும் நிவர்த்த செய்ய வேண்டியது நம்முடைய கடமையாகும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி பல முறை பேசியுள்ளார். அதற்கேற்றால் போல் புதிய மின்விளக்குகள் அமைப்பதற்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மாப்பிள்ளையூரணி விலக்கு சங்கரபேரி விலக்கு புதிய மின் கோபுர விளக்கு அமையவுள்ள இடத்தை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் கூறுகையில் தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளிலும் முக்கிய சந்திப்புகளில் சிறிய அளவிலான உயர் மின்விளக்குகள் தனியார் பங்களிப்புடன் ஏற்கனவே 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமைத்துள்ளேன். மேலும் பல இடங்களில் அமையவுள்ளது. அதன் ஒருபகுதியாக தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட எட்டையாபுரம் ரோட்டிலுள்ள மாப்பிள்ளையூரணி விளக்கு மற்றும் சங்கரபேரி விளக்கு சங்குமால் காந்தி இர்வின் உப்பு சங்கத்தின் அருகே (திரேஸ்புரம்) ஆகிய 3 இடங்களில் புதிய மின்விளக்குள் அமையவுள்ளது. வரும் நாட்களில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் மாநகர் இருளில்லாத ஒளிதரும் வகையில் தேவையான இடங்களில் இதுபோன்ற விளக்குகள் அமைக்கப்படும். மக்கள் நலன் தான் முக்கியம் என்ற அடிப்படையில் முதல்வர் வழியில் நாங்களும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பணியாற்றுகிறோம் என்ற தெரிவித்தார்.

ஆய்வின் போது மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், வட்டப்பிரதிநிதி மார்ஷல், மேயரின் உதவியாளர்கள் பிரபாகர், ஜோஸ்பர், இருந்தனர்.

Previous Post

தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்

Next Post

திமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சூளுரை

Next Post
திமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சூளுரை

திமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சூளுரை

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In