தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி சிவந்தாகுளம் நடுநிலைப்பள்ளியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பள்ளியில் மேல்நிலைப்பள்ளிக்காக கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறைகளை பார்வையிட்டார். அப்போது அதே வளாகத்தில் செயல்படும் மாற்றுத்திறனாளி பள்ளி மாணவர்களுக்கும் கூடுதல் வகுப்பறை, சாய்வு தளம் மற்றும் பிசியோதரபி மருத்துவர் வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை வைத்தனர். அதனை செய்து தருவதாக மேயர் ஜெகன் பெரியசாமி உறுதியளித்தார்.
அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி டபுள்யூ.ஜி.சி.ரோட்டில் சி.வ.தொடக்கப்பள்ளியை ஆய்வு செய்த மேயர், அங்கு நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டு புதிய வசதிகள் செய்து கொடுக்க உறுதியளித்தார். பின்னர் பாண்டுரங்கன் தெருவில் உள்ள மேலூர் நடுநிலைப்பள்ளியை அறிஞர் அண்ணா மாநகராட்சி மண்டபம் எதிரில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடத்திற்கு இடமாற்றுவது தொடர்பாக ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வுகளை செய்தபின் மேயர் ஜெகன் பெரியசாமி கூறியதாவது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கிறது. முதலமைச்சர் ஸ்டாலின் தொலைநோக்கு திட்டமான காலை உணவு திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சிவந்தாகுளம் நடுநிலைப்பள்ளி 250 மாணவ, மாணவியர் இருந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டில் மாணவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை எட்டியுள்ளது. மாநகராட்சி பகுதியில் அனைத்து பள்ளிகளிலும் புதிய கட்டிடங்கள், கழிப்பறைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் பள்ளி செல்லாத குழந்தைகள் மாநகராட்;சி முழுவதும் இல்லாத நிலையை உருவாக்கி தமிழகத்தில் முதன்மை மாநகராட்சியாக அனைத்து பள்ளிகளையும் நல்லமுறையில் கண்காணித்து முதலமைச்சருக்கு பெருமை சேர்ப்போம் என்றார்.
நேற்று தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ள பல பள்ளிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரடி ஆய்வு திடீரென மேற்கொண்டார். கலைஞர் ஆட்சியில் வரும் முன் காப்போம் திட்டம் கொண்டு வந்ததை போல் பல திட்டங்களை செயல்படுத்தும் விதமாக ஆய்வுக்கு சென்ற அனைத்து பள்ளியின் தலைமை ஆசிரியர்களையும் மரியாதையுடன் வணங்கியதை பள்ளியில் இருந்த மற்ற ஆசிரியர்கள் மாணவ மாணவியர்கள் ஓரு மேயர் நல்ல ஓழுக்கத்தை எப்படி கடைபிடிக்க வேண்டும் என்பதற்கு முன் உதாரணமாக செயல்படுகிறார். என்பதை மற்றவர்களுக்கு முன்னோடியாக இருந்து வழிகாட்டியுள்ளார். இது போல் அனைவரும் வணக்கம் தெரிவித்து மற்றவர்களின் மரியாதையும் நல்ல பழக்க வழக்கத்தையும் கடைபிடிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் மாணவ மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார்கள்.
அவருடன் மாநகராட்சி மேற்கு மண்டலத் தலைவர் அன்னலெட்சுமி, முன்னாள் கவுன்சிலர்கள் கோட்டுராஜா, பாலன், கவுன்சிலர் சுரேஷ்குமார் மற்றும் ஒப்பந்ததாரர்கள் உடன் இருந்தனர்.

