தூத்துக்குடி.
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி முழுவதும் ஒவ்வொரு பகுதியாக வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறார்.
அதன்படி மாநகராட்;சி 32வது வார்டுக்குட்பட்ட அண்ணாநகர் சந்தனமாரியம்மன் கோவில் அருகில் அமைச்சர் கீதாஜீவனிடம் வேலைவாய்ப்பு, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி, கால்வாய் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். பின்னர் சில பகுதிகளில் நடந்தே சென்று குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் பொதுமக்களிடம் அமைச்சர் கூறுகையில் மக்களுக்கு தேவையான அடிப்படை பணிகள் அனைத்தும் 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் முறையாக நடைபெறாமல் இருந்ததால் பல்வேறு குறைபாடுகள் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. அதை முழுமையாக அதிகாரிகளிடம் எடுத்துக்கூறி அனைத்து குறைகளையும் முழுமையாக நிறைவேற்றி தருவேன், என்று உத்தரவாதம் அளித்தார்.
நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி மண்டல தலைவர் அன்னலெட்சுமி, கவுன்சிலர்கள் கந்தசாமி, கனகராஜ், பொன்னப்பன், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் பிரபு, பகுதி செயலாளர் ரவீந்திரன், மாநகர மாணவரணி துணை அமைப்பாளர் கந்தசாமி, மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், வட்ட செயலாளர் பாலு, அவைத்தலைவர் எட்வர்ட் ராஜா, துணை செயலாளர்கள் மாரிமுத்து, ஜோன்சன், வட்ட பிரதிநிதிகள் குருசாமி, தாமஸ், தளவாய்சாமி, இளங்கோவன், பாலா, பொருளாளர் வெங்கடாச்சலம், வர்த்தக அணி துணை செயலாளர் ஜெயமுருகன், மகளிரணி மாரியம்மாள் மற்றும் பாஸ்கர், மணி, அல்பட், மாநகராட்சி உதவி ஆணையர் சேகர், சுகாதார ஆய்வாளர் ஸ்டாலின் பாக்கியநாதன் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

