நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளுர் வட்டம், வேளாங்கண்ணி பேராலயத்தில் புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் 07.04.2023 முதல் 09.04.2023 வரையிலான நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வேளாங்கண்ணி பேராலயத்திற்கு வருகை புரிவார்கள் என்பதால், மாவட்ட நிர்வாகத்தால் போதிய முன்னேற்பாடுகள் நடவடிக்கைகளாக போக்குவரத்து சீர்படுத்துதல், குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள், துய்மை பணிகள், மருத்துவ முகாம் போன்ற அத்தியாவசிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும், பக்தர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எதிர்வரும் 07.04.23 முதல் 09.04.23 வரை சிறப்பு கட்டுப்பாட்டு அறை செயல்படும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஏதேனும் தகவல் தேவைப்படின் 04365-251992 என்கிற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெற வேண்டுமாறு மேலும், கோவிட் -19 நோய் தடுப்பு நடவடிக்கையாக அனைவரும் முககவசம் அணிதல் மற்றும் கிரிமி நாசினி பயன்படுத்துவதை தவறாது பின்பற்ற வேண்டுமாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ், தெரிவித்துள்ளார்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

