நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றியம் நரிமணம் ஊராட்சி மற்றும் கீழையூர் ஊராட்சி ஒன்றியம் வாழக்கரை ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டடங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ், இன்று திறந்து வைத்தார்.
நாகப்பட்டினம் ஏப்ரல் 06
நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றியம் நரிமணம் ஊராட்சி மற்றும் கீழையூர் ஊராட்சி ஒன்றியம் வாழக்கரை ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ், தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் என்.கௌதமன் மற்றும் தமிழ்நாடு தாட்கோ கழக தலைவர் உ.மதிவாணன் ஆகியோர் இன்று திறந்து வைத்தார்கள்.
இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
திருமருகல் ஊராட்சி ஒன்றியம் நரிமணம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ. 22.25 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் மற்றும் கீழையூர் ஊராட்சி ஒன்றியம் வாழக்கரை ஊராட்சியில் தேசிய கிராம சுயராஜ்ய திட்டத்தின் கீழ் ரூ.23.56 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் அகிய கட்டங்கள் பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவைக்கப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி நம் மாவட்டத்திற்கு கடந்த ஆண்டில் 30 பள்ளிகளில் 60 பள்ளி கட்டடங்கள் , 15 ஊராட்சி மன்ற கட்டடங்கள், 19 ஊராட்சி மன்ற செயலக கட்டடங்கள், சிறப்பு அறிவிப்பாக 25 நியாய விலை கடை கட்டடங்கள் , 10 நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டடங்களில் 9 கட்டடங்கள் திறக்கப்பட்டும் உள்ளது. இந்த ஆண்டு 72 பள்ளி கட்டடங்கள் மற்றும் 43 செயலக கட்டிடங்கள் கட்டுவதற்கு அனுமதி கோரப்பட்டுள்ளது. மேலும் மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.52 கோடி மதிப்பீட்டில் 150 கிலோ மீட்டர் சாலைகளை தார் சாலை அமைப்பதற்காகவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து இவ்விழாவில் பயனாளிகளுக்கு தென்னங்கன்றுகளையும், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்pன் கீழ் 5 பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும், மற்றும் உடல் எடை குறைவாகவுள்ள 3 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பவுடர் பெட்டகங்களையும் மாவட்ட ஆட்சியர் தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் மற்றும் தமிழ்நாடு தாட்கோ கழக தலைவர் ஆகியோர் வழங்கினார்.

இவ்விழாவில் வட்டார வேளாண்மை ஆலோசனை குழு தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன், திருமருகல் வட்டார ஆத்மா குழு தலைவர் செல்வ செங்குட்டுவன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஆர்.டி.எஸ்.சரவணன், கீழையூர் ஒன்றியக்குழு தலைவர் செல்வராணி ஞானசேகரன், திருக்குவளை கல்வி வளர்ச்சி அறக்கட்டளை உறுப்பினர் சோ.பா.மலர்வண்ணன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் கௌசல்யா இளம்பரிதி, வி.சரபோஜி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வி.செல்வம், மஞ்சுளா மாசிலாமணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நரிமணம் ஊராட்சி மன்ற தலைவர் பி.என்.கார்த்தி, வாழக்கரை ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.ஆர்.கலைச்செழியன் மற்றும் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

