நாகப்பட்டினம் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி அரசு பொதுத்தேர்வு நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நாகப்பட்டினம் ஏப்ரல் 6
நாகப்பட்டினம் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி அரசு பொதுத்தேர்வு நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
2022 – 2023 ஆம் ஆண்டுக்குரிய எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் 06.04.20233 முதல் துவங்கி 20.04.2023 வரை நடைபெற உள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் 138 பள்ளிகளில் இருந்து 42 தேர்வு மையங்களில் 4379 மாணவர்களும், 4126 மாணவிகளும் ஆக மொத்தம் 8505 தேர்வர்கள்; தேர்வு எழுத உள்ளார்கள். தனித்தேர்வர்களுக்கென தனிமையம் அமைக்கப்பட்டு 117 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளார்கள். எஸ்எஸ்எல்சி தேர்வில் 107 மாணவர்கள் சொல்வதை எழுதுவதற்கு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். 31 மாணவ,மாணவிகளுக்கு கூடுதல் ஒரு மணி நேரம் மற்றும் தரைத்தள வசதியில் தேர்வு எழுதும் சலுகைகளும், 20 மாணவ, மாணவிகளுக்கு ஆங்கில பாடம் எழுதுவதிலிருந்து விலக்கு அளித்தும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.
தேர்வு பணிகளில் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 787 ஆசிரியர்களும், 94 அலுவலக பணியாளர்களும், 58 காவலர்களும் மொத்தம் 939 பணியாளர்கள் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்வு நடைபெறுவதை கண்காணித்திடவும் முறைகேடுகள் நடைபெறாமல் தவிர்த்திடவும் 10 பறக்கும்படை உறுப்பினர்களும், 42 நிலையான பறக்கும்படை உறுப்பினர்களும் மொத்தம் 52 ஆசிரியர்கள் பறக்கும்படை உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு தேர்வு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்வு எழுதும் அனைத்து மையங்களிலும் தடை ஏற்படாத வகையில் மின் வசதியை ஏற்படுத்தவும், குடிநீர் வசதி, கழிவறை வசதிகளும் மற்றும் காற்றோட்ட வசதிகளுடன் கூடிய தேர்வு அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், இன்றய தினம் 4127 மாணவர்களும், 4011 மாணவிகளும் என மொத்தம் 8138 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினார்கள். 252 மாணவர்களும், 115 மாணவிகளும் தேர்வு எழுதவில்லை என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எம்.கே.சி.சுபாஷினி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

