• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு

policeseithitv by policeseithitv
April 6, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

 

நாகப்பட்டினம்8 ஏப்ரல் 05

வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் புஷ்பவனம் ஊராட்சி அழகு கவுண்டர் தெருவில் உள்ள பெருமாள் குளத்தில் ரூ.9.90 இலட்சம் மதிப்பீட்டிலும், தேத்தாக்குடி தெற்கு ஊராட்சி தெற்குவெளியில் உள்ள மாங்குளத்தில் ரூ.9.43 இலட்சம் மதிப்பீட்டிலும், ஆதனூர் ஊராட்சி அண்டர்காடு கிராமத்தில் உள்ள அய்யர் வீட்டுகுளத்தில் ரூ.8.65 இலட்சம் மதிப்பீட்டிலும், ஆயக்காரன்புலம் 4 ஊராட்சி திம்மநாயக்கன்குத்தகை கிராமத்தில் உள்ள திரௌபதியம்மன் கோவில் குளத்தில் ரூ.8.95 இலட்சம் மதிப்பீட்டிலும், தகட்டூர் ஊராட்சி சுப்ரமணியன்காடு கிராமத்தில் உள்ள வெட்டு குளத்தில் ரூ.9.98 இலட்சம் மதிப்பீட்டிலும் புனரமைப்பு, சுற்றுச்சுவர் மற்றும் படித்துறை கட்டும் பணிகள் மற்றும் கடினல்வயல் ஊராட்சியில் ரூ.8.50 இலட்சம் மதிப்பீட்டில் நெற்களம் அமைக்கும் பணிகள் நடைபெறுவதையும், புஷ்பவனம் ஊராட்சியில் உள்ள அய்யனார் கோவில் தெரு சாலையை தமிழ்நாடு கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.58.00 இலட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்படுத்தும் பணி நடைபெறுவதையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மற்றும் 15 ஆவது மானிய நிதியின் கீழ் தேத்தாக்குடி வடக்கு ஊராட்சி, மருதூர் தெற்கு ஊராட்சி மற்றும் வாய்மேடு ஊராட்சியில் தலா ரூ.42.65 இலட்சம் என மொத்தம் 127.95 இலட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி செயலாக்க கட்டடம் கட்டும் பணிகள் நடைபெறுவதையும், நெய்விளக்கு ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.23.00 இலட்சம் மதிப்பீட்டில் இரண்டு புதிய வகுப்பறை கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெறுவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனைத்தொடர்ந்து பிரதம மந்திரி சாலை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் ஆதனூர் ஊராட்சியில் அகஸ்தியன்பள்ளி கிராமம் முதல் தென்னடார் கிராமம் வரை உள்ள சாலையை ரூ.255.21 இலட்சம் மதிப்பீட்டிலும், ஆயக்காரன்புலம் 1 ஊராட்சியில் செல்லியம்மன் கோவில் முதல் மருதூர் தெற்கு ஊராட்சி வரையுள்ள சாலையை ரூ.309.06 இலட்சம் மதிப்பீட்டிலும், பஞ்சநதிக்குளம் நடுசேத்தி ஊராட்சியில் சண்முகா பள்ளி முதல் ஆயக்காரன்புலம் 4 ஊராட்சி வரையுள்ள சாலையை ரூ.274.56 இலட்சம் மதிப்பீட்டிலும், மருதூர் வடக்கு ஊராட்சியில் மருதூர் வடக்கு முதல் மருதூர் தெற்கு வரையுள்ள சாலையை ரூ.282.36 இலட்சம் மதிப்பீட்டிலும், செண்பகராயநல்லூர் ஊராட்சியில் தென்னம்புலம் முதல் செட்டிபுலம் வரையுள்ள சாலையை ரூ.503.12 இலட்சம் மதிப்பீட்டிலும் சாலை பலபடுத்தும் பணிகள் நடைபெறுவதையும், குழந்தை நேயம் பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கருப்பம்புலம் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, வண்டுவாஞ்சேரி ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மற்றும் செண்பகராயநல்லூர் ஊராட்சி தெற்குகாடு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலா ரூ.26.00 இலட்சம் மதிப்பீட்டில் என மொத்தம் ரூ.78.00 இலட்சம் மதிப்பீட்டில் இரண்டு புதிய வகுப்பறை கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெறுவதையும், வாய்மேடு ஊராட்சியில் 15 ஆவது மானிய நிதியின் கீழ் ரூ.68.80 இலட்சம் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் கட்டும் பணிகள் நடைபெறுவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் எஸ்.சேகர், வேதாரண்யம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பி.ராஜூ எஸ்.ஆர்.பாஸ்கரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்

எல்விஸ் லாய் மச்சோடா.

Previous Post

தூத்துக்குடியில் மனு கொடுத்த ஓரு மணி நேரத்தில் மாற்றுத்திறனாளிக்கு 3 சக்கர சைக்கிள் அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார். பொதுமக்கள் பாராட்டு

Next Post

நாகப்பட்டினம் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி அரசு பொதுத்தேர்வு நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Next Post
நாகப்பட்டினம் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி அரசு பொதுத்தேர்வு நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி அரசு பொதுத்தேர்வு நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In