நாகப்பட்டினம் மாவட்டம்
நம்பியார் நகரில் வருவாய் மற்றும்பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் ரூ.635 இலட்சம் மதிப்பீட்டில் பேரிடர் மீட்பு மைய (புயல் பாதுகாப்பு மையம்) கட்டடம் கட்டும் பணிக்கான பூமி பூஜை மற்றும் நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் பெருங்கடம்பனூர் ஊராட்சியில் ரூ.16 இலட்சம் மதிப்பீட்டில் நியாய விலைக்கடையினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் என்.கௌதமன் நாகப்பட்டினம் சட்ட மன்ற உறுப்பினர் ஜெ.முகமது ஷா நவாஸ் ஆகியோர் உடன் கலந்துகொண்டனர்.
நாகப்பட்டினம் ஏப்ரல் 03
நாகப்பட்டினம் மாவட்டம் நம்பியார் நகரில் வருவாய் மற்றும்பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் ரூ.635 இலட்சம் மதிப்பீட்டில் பேரிடர் மீட்பு மைய (புயல் பாதுகாப்பு மையம்) கட்டடம் கட்டும் பணிக்கான பூமி பூஜை மற்றும் நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் பெருங்கடம்பனூர் ஊராட்சியில் ரூ.16 இலட்சம் மதிப்பீட்டில் நியாய விலைக்கடையினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் என்.கௌதமன் நாகப்பட்டினம் சட்ட மன்ற உறுப்பினர் ஜெ.முகமது ஷா நவாஸ் ஆகியோர் உடன் கலந்துகொண்டனர்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது.
நாகப்பட்டினம் தாலுகா நம்பியார் நகரில் பேரிடர் மீட்பு மையம் (புயல் பாதுகாப்பு மையம்) கட்டடம் கட்டும் பணி தமிழக அரசால் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் நிர்வாக அனுமதி பெற்று அனுமதி ரூ.635 இலட்சத்திற்கு நிதி ஒதுக்கீட்டில் கட்டப்பட உள்ளது. இதற்காக நம்பியார் நகரில் 4050.00 சதுர மீட்டர் பரப்பளவில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இக்கட்டடம் தரை மற்றும் முதல் தளத்தில் தலா 617.00 சதுர மீட்டர் வீதம் மொத்தம் 1234.00 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. கட்டடம் தரைத்தளத்தில் தங்கும் உணவு கூடம், தாழ்வாரம், அலுவலகம், மின் அறை, சமையல் கூடம், கழிவறை வசதிகளுடனும், முதல் தளத்தில் தங்கும் விழா கூடம், தாழ்வாரம், பாதுகாப்பு அறை மற்றும் கழிவறை வசதிகளுடன் கட்டப்பட உள்ளது. மேலும் வாகன நிறுத்தும் வசதிகள், கால்நடைகளுக்கான கூடாரம், சுற்றுச்சுவர் மற்றும் மதகுப்பாலம் வசதிகளுடன் கட்டப்பட உள்ளது. 1000 பொதுமக்கள் தங்கும் வகையிலும் பிற சமயங்களில் பல்வேறு விழா நிகழ்ச்சிகள் நடத்தும் வகையில் கட்டப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து, நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் பெருங்கடம்பனூர் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின்(2021-2023) கீழ் ரூ.16 இலட்சம் மதிப்பீட்டில் நியாய விலைக்கடையினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் வி.ஷகிலா, நகர மன்ற தலைவர் இரா.மாரிமுத்து, ஒன்றியக்குழுத்தலைவர் வே.அனுசியா, நகர மன்ற துணைத் தலைவர் செந்தில்குமார், கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் கா.பா.அருள்அரசு, நாகப்பட்டினம் வட்டாட்சியர் என்.இராஜசேகரன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் மு.பிரபாகர், உதவி செயற்பொறியாளர் ஆர்.வேலுசாமி, பெருங்கடம்பனூர் ஊராட்சிமன்றத் தலைவர் பாதீபா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரேவதி, சா.பாலமுருகன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

