• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி 22வது வார்டு பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.  

policeseithitv by policeseithitv
April 3, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி 22வது வார்டு பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.  
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினரும் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுமக்கள் குறைகளை தெரிவிப்பதற்கு ஏற்கனவே வாட்ச்அப் எண் கொடுக்கப்பட்டு அதன் மூலம் பொதுமக்கள் பலர் தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை தெரிவித்து வருகின்றனர். அமைச்சர் உள்ளிட்ட அலுவலர்கள் அதன் குறைபாடுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் உடனுக்குடன் தெரிவித்து தீர்த்து வைக்கின்றனர்.

இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களை உள்ளடக்கிய ஆய்வு கூட்டம் நடத்தி மக்களின் கோரிக்கை மனுக்களை காகிதமாக எண்ணாமல் அவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் ஆவணமாக கருதி அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில் மாநகராட்;சி 22வது வார்டுக்குட்பட்ட பொன்னரகம் பகுதியில் உள்ள பொதுமக்கள் அமைச்சர் கீதாஜீவனிடம் வேலைவாய்ப்பு, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி, கால்வாய் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். பின்னர் அழகேசபுரம், முத்துகிருஷ்ணாபுரம் சில பகுதிகளில் குறைகேட்டார்.

பின்னர் அவர்களிடம் அமைச்சர் கூறுகையில் மக்களுக்கு தேவையான அடிப்படை பணிகள் அனைத்தும் 10 ஆண்டுகளாக முறையாக நடைபெறாமல் இருந்துள்ளன. இனி அனைத்து பணிகளும் நல்ல முறையில் செய்து கொடுக்கப்படும். உங்கள் நலனில் அக்கறை உள்ள முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் எல்லா நன்மைகளும் கிடைக்கும் என்றார்.

நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி மண்டல தலைவர் கலைச்செல்வி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் பிரபு, மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் அருண்சுந்தர், வட்ட செயலாளர் மனோ மரியதாசன், துணை செயலாளர்கள் பீரிடா லெட்சுமி, லிங்கராஜ், துரை, பொருளாளர் பரமசிவம், வட்டப்பிரதிநிதிகள் நல்லதம்பி. ஆதிநாராயணன், தமிழரசன், ஜோசப், கருப்பசாமி, முன்னாள் கவுன்சிலர் செந்தில்குமார், மாநகராட்சி உதவி செயற்பொறியாளா சரவணன், கவுன்சிலர் தனலட்சுமி, சுகாதார ஆய்வாளர் ராஜசேகர், மற்றும் மணி, அல்பட், முன்னாள் அறங்காவலர் அறிவழகன், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் சூர்யா, உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

தூத்துக்குடி மீனாட்சிபுரம் பத்திரகாளியம்மன் கோவில் கொடைவிழாவையொட்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

Next Post

நாகப்பட்டினம் மாவட்டம்  நம்பியார் நகரில் வருவாய் மற்றும்பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் ரூ.635 இலட்சம் மதிப்பீட்டில் பேரிடர் மீட்பு மைய (புயல் பாதுகாப்பு மையம்) கட்டடம் கட்டும் பணிக்கான பூமி பூஜை மற்றும் நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் பெருங்கடம்பனூர் ஊராட்சியில் ரூ.16 இலட்சம் மதிப்பீட்டில் நியாய விலைக்கடையினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று தொடங்கி வைத்தார்.

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In