தூத்துக்குடி மீனாட்சிபுரம் பத்திரகாளியம்மன் சந்தனமாரியம்மன் கோவில் கொடைவிழாவை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. கோவில் கொடை விழாவை யொட்டி கடந்த 28ம் தேதி கால்நட்டு விழா நடைபெற்றது.
நேற்று காலை விநாயகர் வழிபாடு நடைபெற்றது. இரவு மழை வளம், நாட்டின் ஓற்றுமை, மனித நேயம், அமைதி, தொழில்வளம், பெருகவேண்டும், கொரோனா கொடிய நோயிலிருந்து விடுபட்டு அனைவருக்கும் ஆரோக்கியமான வாழ்க்கை அமைய வேண்டும் ஆகியவற்றிற்காக பஜனையுடன் 108திருவிளக்கு பூஜை நடைபெற்று அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
பின்னர் இன்று (3.4.23) காலை அம்மனுக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது, மாலை தீர்த்தவாரி எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. 4ம் தேதி செவ்வாய்கிழமை காலை ஸ்ரீமஹா கணபதி கோவிலிருந்து அம்மனுக்கு பால்குடம் எடுத்தல், மதியம் அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம், மதிய கொடை, அன்னதானம், இரவு முளைப்பாரி எடுத்து உலா வருதல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. 5ம் தேதி புதன்கிழமை காலை பொங்கலிடுதல், மஞ்சள் நீராட்டு, மாலை முiளைப்பாரி கரைத்தல் நிகழ்ச்சியோடு விழா நிறைவுபெறுகிறது.
கோவில் கொடைவிழாவிற்கான ஏற்பாடுகளை தலைவர் வேல்ராஜ், செயலாளர் சரவணன், இணைச்செயலாளர் குமரன், பொருளாளர் தட்சணாமூர்த்தி, துணைத்தலைவர்கள் தமிழரசன், செல்வக்குமார், மகாராஜா, துணை செயலாளர்கள் கதிரேசன், பேச்சியப்பன், சங்கர், கந்தசாமி, ஆகியோர் செய்திருந்தனர்

