நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நாகப்பட்டினம் மார்ச் 29
நாகப்பட்டினம் மாவட்டம் பாப்பாகோவிலில் உள்ள சமத்துவபுரத்தில் கட்டப்பட்டுவரும் புதிய வீடுகள் கட்டுமானப் பணிகளையும், மேல வாஞ்சூர் அமிர்தாநகரில் ரூ.26 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் தொடக்கப்பள்ளி புதிய கட்டிடத்தின் கட்டுமான பணிகளையும், திருமருகல் ஊராட்சி ஒன்றியம் பனங்குடி ஊராட்சியில் உள்ள சமத்துவபுரத்தில் புதிதாக வீடுகள் கட்டும் கட்டுமான பணிகளையும், திருமருகல் ஊராட்சி ஒன்றியம் பாரத் நிர்மான் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம்- கீழ் ரூ.290.10 இலட்சம் மதிப்பீட்டில் 3.683 கி.மீ தொலைவில் ஆலங்குடிச்சேரி முதல் அகரகொந்தகை வரை சாலை அமைக்கும் பணியினையும், அகரகொந்தகை ஊராட்சியில் ரூ.42.65 இலட்சம் மதிப்பீட்டில் கிராம ஊராட்சி செயலக கட்டிடத்தின் கட்டுமான பணிகளையும், சியாத்தமங்கை ஊராட்சியில் ரூ.39.95 இலட்சம் மதிப்பீட்டில் கிராம ஊராட்சி செயலக கட்டிடத்தின் கட்டுமான பணிகளையும், திருச்செங்காட்டாங்குடி ஊராட்சியில் ரூ.26 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நடுநிலைப்பள்ளி புதிய கட்டிடத்தின் கட்டுமான பணிகளையும், திருச்செங்காட்டாங்குடி ஊராட்சியில் ரூ.11.62 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடிமையம் புதிய கட்டிடத்தின் கட்டுமான பணிகளையும், திருச்செங்காட்டாங்குடி ஊராட்சி கீழமேலவீதியில் உத்திராபரீஸ்வரர் கோவில் தேரோட்டத்திற்கு சாலை மறுசீரமைக்கும் பணிகளையும், திருப்புகலூர் ஊராட்சியில் ரூ.10.93 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடிமையம் புதிய கட்டிடத்தின் கட்டுமான பணிகளையும், திருப்புகலூர் ஊராட்சியில் ரூ.6.62 இலட்சம் மதிப்பீட்டில் அள்ளிகுளம் தூர்வாருதல் மற்றும் படித்துறை அமைக்கும் பணிகளையும், வவ்வாலடி ஊராட்சியில் ரூ.23 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இரண்டு வகுப்பறை கட்டிடத்தின் கட்டுமான பணிகளையும், வவ்வாலடி ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் வருகை மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துணவின் தரம் குறித்தும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் ஏனங்குடி ஊராட்சியில் ரூ.26 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடத்தின் கட்டுமான பணிகளையும், கொங்கராயநல்லூர் ஊராட்சியில் ரூ.26 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடத்தின் கட்டுமான பணிகளையும், புத்தகரம் ஊராட்சியில் ரூ.11.62 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடிமையம் புதிய கட்டிடத்தின் கட்டுமான பணிகளையும், ஆதலையூர் ஊராட்சியில் ரூ.26 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டிடத்தின் கட்டுமான பணிகளையும், ஆதலையூர் ஊராட்சியில் உள்ள நியாய விலைக்கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். கோட்டூர் ஊராட்சியில் ரூ.21 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இரண்டு வகுப்பறை கட்டிடத்தின் கட்டுமான பணிகளையும், கோட்டூர் ஊராட்சியில் ரூ.1.52 இலட்சம் மதிப்பீட்டில் உறிஞ்சிகுழி அமைக்கும் பணிகளையும், திருக்கண்ணபுரம் ஊராட்சியில் ரூ.42.65 இலட்சம் மதிப்பீட்டில் கிராம ஊராட்சி செயலக கட்டிடத்தின் கட்டுமான பணிகள் நடைபெறுவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் சேகர், திருமருகல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம்.ஜவகர், எஸ்.பாலமுருகன், உதவிப்பொறியாளர்கள் செந்தில்குமார், சுரேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

