இன்று சனிக்கிழமை காலை நடைபெற்ற கவாத்து பயிற்சியில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்களின் உத்தரவுப்படி விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்களும் தேர்தல் பணிகளில் ஈடுபட வேண்டிய காரணத்தால் கொரோனோ நோய்த்தொற்றை தடுக்கும் பொருட்டு covid-19 தடுப்பூசி போடுவதன் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
அதன் பலனாக இன்று மட்டும் விளாத்திகுளம் உட்கோட்டத்தில் விளாத்திகுளம் குற்றப்பிரிவு ஆய்வாளர் திரு.முருகன் உட்பட காவல்துறையினர் 37 பேர் covid-19 தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதுவரை விளாத்திகுளம் உட்கோட்டத்தில் 142 நபர்கள் covid-19 தடுப்பூசி போட்டு கொண்டுள்ளனர்.


