நெல்லை மாநகர போக்குவரத்து போலீசாருக்கு கோடை வெப்பத்தின் சோர்வை போக்குவதற்கு
கோடை வெப்பத்தையும் பொருட்படுத்தாமல் வாட்டி வதைக்கும் வெயிலில் போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபடுகின்றனர். கொடூர வெயிலை கண்டுகொள்ளாமல் பணி செய்யும் போக்குவரத்து போலீசாருக்கு குளிர்பானங்கள் வழங்குவதற்கு நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அன்பு அவர்கள் உத்தரவின் பெயரில் நெல்லை மாநகர போக்குவரத்து மற்றும் குற்ற பிரிவு துணை ஆணையாளர் மகேஷ்குமார் அவர்கள கோடை வெயிலை சமாளிக்க நெல்லையில் போக்குவரத்து போலீசாருக்கு மோர், மற்றும் பழ ஜூஸ் வழங்கினார் .


இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பா.மகேஸ்வரி உதவி ஆய்வாளர்கள் பாண்டி ,கென்னடி, சப்பாணி, பாண்டித்துரை, ஐயப்பன், மற்றும் போக்குவரத்து காவலர்கள் பலர் கலந்து கொண்டனர் கோடை வெயில் முடிவுக்கு வரும்வரையில் நெல்லை மாநகர போக்குவரத்து போலீசாருக்கு பழ ஜூஸ் குளிர்பானங்கள் குடிநீர் போன்றவை வழங்க நெல்லை மாநகர காவல்துறை முடிவு செய்து இன்று அதனை இன்று துவக்கி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
செய்தி தொகுப்பு: போலீஸ் செய்தி வெப் நியூஸ் சேனலுக்காக
சிறப்புச் செய்தியாளர் நெல்லை கொம்பன் ராஜ்

