வேதாரணியம் மார்ச் 20
நாகப்பட்டினம் வனஉயிரினக் கோட்டம், வேதாரண்யம் வனச்சரகம், திருச்சி மண்டல தலைமை வனப்பாதுகாவலர் N.சதீஷ், நாகப்பட்டினம் வனஉயிரினக் காப்பாளார் யோகேஷ்குமார் மீனா, அவர்களின் அறிவுரையின்படி
இச்சரத்திற்க்குட்பட்ட ஆற்காட்டுதுறை பகுதியில் மீனவர் கிராமத்தில் கடல் பசு பாதுகாத்தல் மற்றும் விழிப்புணர்வு முகாம், மற்றும் கடல்சார் அலுவலர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. முகாமினை வேதாரண்யம் வனச்சரக அலுவலர் பா . அயூப் கான் தலைமை ஏற்று நடத்தி வைத்தார். கிராம பஞ்சாயத்தார்கள் ராஜேந்திரன், நகரமன்ற உறுப்பினர் இமயா முருகையன், மீனவர்கள், மீன்வளத்துறை ஆய்வாளர் நடேஷ் ராஜா, கடலோர காவல்துறை குழும ஆய்வாளர் செல்வராஜ், மீனவர்கள், பள்ளி மாணவ மாணவிகள், வனத்துறை பணியாளர்கள் கலந்துகொண்டனர் .இதில் ஓம்கார் தொண்டுநிறுவன இயக்குனர் Dr.பாலாஜி கடல் பசு பற்றிய காணொளி மூலம் பாதுகாப்பு , அதனால் மீனவர்களுக்கு ஏற்படும் பயன்கள் குறித்து விளக்கம் அளித்தார். வனவர் பெரியசாமி நன்றிவுரையாற்றினார்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

