வேதாரணியம் அடுத்த துளசியாப்பட்டினத்தில் ஔவையாருக்கு மணிமண்டபம்
வேதாரண்யம் மார்ச் 20
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த துளசியாப்பட்டினத்தில் ஒளவைக்கு
ரூ.18.5 கோடியில்
மணிமண்டபம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்
என நாகை மாவட்ட ஆட்சித் தலைவர் அ. அருண் தம்புராஜ் தெரிவித்தார்.
வேதாரண்யத்தை அடுத்த துளசியாப்பட்டினம் கிராமத்தில் அமைந்துள்ள விஸ்வநாதர் ஔவையார் கோயிலில்
தமிழக அரசு சார்பில் 49 ஆவது ஒளவை பெருவிழா ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கியது.
பெருவிழாவானது 3 நாட்கள் நடைபெறும்.
தொடக்க நிகழ்வுக்கு நாகை மாவட்ட ஆட்சித் தலைவர் அ. அருண் தம்புராஜ் தலைமை ஏற்றார்.விழாவில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத் தலைவர் என் கௌதமன், இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் ராணி,ஊராட்சி தலைவர்கள் வனிதா,தமிழ்ச்செல்வி,வேதாரணியம் நகர் மன்ற தலைவர் மா.மீ. புகழேந்தி
உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டு பேசினார்கள்.
விழாவில் நாகை மாவட்ட ஆட்சியர் அ.அருண் தம்புராஜ் பேசும் போது துளசியாப்பட்டினத்தில் ஒளவையாருக்குவிழா எடுப்பது பெருமையானதாகும். இந்த விழா கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சிறப்பு அடைந்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.எதிர்காலத்தில் இன்னும் சிறப்பாக நடத்துவோம்.நாகை மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் வேளாங்கண்ணி நாகூரை போல
துளசியாப்பட்டினமும் பெருமை சேர்க்கும்.தமிழகத்துக்கு தனி விழாவாக இந்த விழா அமையும்.
ஒளவையின் படைப்புகள் காலத்தால் அழியாதவை. அவற்றை நாம் பயனுள்ளதாக மாற்றிக் கொள்ள வேண்டும்.ஒளவைக்கு 18.5 கோடியில் மணிமண்டபம் மற்றும் கோயில் குடமுழுக்கு விழா நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.


மேலும் பள்ளி மாணவ மாணவியரிடையே நடந்த இலக்கிய போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.கலை பண்பாட்டுத்துறை கலைஞர்களின் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் ,சிறப்பு பட்டிமன்றம் ஆகியவை நடைபெற்றன.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

