• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் கொளுத்தும் வெயிலில் அமைச்சர் கீதாஜீவன் வீதி வீதியாக நடந்து சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.  

policeseithitv by policeseithitv
March 19, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில் கொளுத்தும் வெயிலில் அமைச்சர் கீதாஜீவன் வீதி வீதியாக நடந்து சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.  
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினரும் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுமக்கள் குறைகளை தெரிவிப்பதற்கு ஏற்கனவே வாட்ச்அப் எண் கொடுக்கப்பட்டு அதன் மூலம் பொதுமக்கள் பலர் தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை தெரிவித்து வருகின்றனர். அமைச்சர் உள்ளிட்ட அலுவலர்கள் அதன் குறைபாடுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் உடனுக்குடன் தெரிவித்து தீர்த்து வைக்கின்றனர்.

இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களை உள்ளடக்கிய ஆய்வு கூட்டம் நடத்தி மக்களின் கோரிக்கை மனுக்களை காகிதமாக எண்ணாமல் அவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் ஆவணமாக கருதி அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில் மூன்றாவது நாளாக மாநகராட்;சி 28வது வார்டுக்குட்பட்ட இரண்டாம் கேட் பகுதியில் அமைச்சர் கீதாஜீவனிடம் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். கொளுத்தும் வெயிலில் நடந்து சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். அதில் வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி, கால்வாய் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.

இரண்டாம் கேட் பகுதியில் குறைகளை கேட்ட அமைச்சரிடம் முதியவர் 3 சக்கர சைக்கிள் கேட்டு மனு அளித்தார். மற்றொருவர் அப்பகுதியில் சில தெருக்களில் குண்டும் குழியுமாக இருப்பதாக கூறி மனு அளித்த பின் அதனால் ஏற்பட்ட சம்பவத்தில் பலர் பாதிக்கப்பட்டதும் சிலர் காயம் அடைந்ததையும் வீடியோவாகவும் படமாகவும் தனது செல்போனில் எடுத்து வைத்திருந்ததை அமைச்சரிடம் காண்பித்தனர். அதை கையில் வாங்கி முழுமையாக அமைச்சர் கீதாஜீவன் பார்த்தார். பின்னர் வார்டுக்குட்பட்ட பகுதிகளில் வந்து பார்வையிடுமாறு பொதுமக்கள் கேட்டுகொண்டதிற்கிணங்க அப்பகுதியில் ஏற்கனவே நடைபெற்று வரும் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணியை கொளுத்தும் வெயிலில் நடந்தே சென்று பார்வையிட்டு ராஜமன்னார் தெருவில் பாதிப்புக்குள்ளான பகுதியில் முழுமையாக ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் உங்களுக்கு பணி செய்வதற்குதான் என்னை தேர்ந்தெடுத்துள்ளீர்கள் அந்த நம்பிக்கை வீண்போகாத வகையில் இந்த வார்டுக்குட்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறைவேற்றி தருவேன் என்று உறுதியளித்தார்.

நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி மண்டல தலைவர் கலைச்செல்வி, அரசு வழக்கறிஞர் சுபேந்திரன், மாநகர மருத்துவ அணி அமைப்பாளர் அருண்குமார், கவுன்சிலர் ராமுத்தம்மாள், வட்ட செயலாளர் அந்தோணிலாசர், மாவட்ட பிரதிநிதிகள் செந்தில்குமார், நாராயணன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் நாகராஜன், முன்னாள் கவுன்சிலர்கள் குருசாமி, மீனாட்சி சுந்தரம், வட்ட பிரதிநிதி பாஸ்கர், மற்றும் சிவா, மாரியப்பன், அல்பட், மணி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

திமுக ஆட்சியில் தான் பெண்களுக்கு ஏராளமான நன்மைகள் மாப்பிள்ளையூரணி பெண்கள் தின விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் பேசினார்.

Next Post

வேதாரண்யம் அடுத்த கருப்பம்புலம் அருகே தங்கம் வாங்கித் தருவதாக சொல்லி 16 லட்சம் பணம் வாங்கி கொண்டு ஏமாற்றிய பண்டரிநாதன் என்பவர் கைது

Next Post
வேதாரண்யம் அடுத்த கருப்பம்புலம் அருகே தங்கம் வாங்கித் தருவதாக சொல்லி 16 லட்சம் பணம் வாங்கி கொண்டு ஏமாற்றிய பண்டரிநாதன் என்பவர் கைது

வேதாரண்யம் அடுத்த கருப்பம்புலம் அருகே தங்கம் வாங்கித் தருவதாக சொல்லி 16 லட்சம் பணம் வாங்கி கொண்டு ஏமாற்றிய பண்டரிநாதன் என்பவர் கைது

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In