• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

பெண் – ஆண் குழந்தைகளை பாரபட்சமின்றி அறிவுரைகள் கூறி வளர்க்க வேண்டும் மகளிர் தின விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.

policeseithitv by policeseithitv
March 14, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
பெண் – ஆண் குழந்தைகளை பாரபட்சமின்றி அறிவுரைகள் கூறி வளர்க்க வேண்டும் மகளிர் தின விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

பெண் ஆண் குழந்தைகளை பாரபட்சமின்றி அறிவுரைகள் கூறி வளர்க்க வேண்டும் மகளிர் தின விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.

தூத்துக்குடி உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மாநகர திமுக மகளிர் அணி சார்பில் முதலாம் ஆண்டு மகளிர் தின விழா கீதா பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை வகித்தார். மகளிர்கள் கலந்து கொண்ட மியூசிக்கல் சேர் பலூன் உடைத்தல் பாட்டில் நீர் நிரப்புதல் பேச்சு போட்டி கேள்வி பதில் அறிவுத்திறன் போட்டி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் திமுக மகளிர் அணியினர் விழா கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொண்டவுடன் சரிஎன்று ஓப்புக்கொண்டேன் காரணம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துவதன் மூலம் ஓரு நாள் வேலைகளை ஓதுக்கி வைத்து விட்டு மகிழ்ச்சியான நாளாக அமையட்டும் என்று நடத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் புதிய விழிப்புணர்வு பல தகவல்கள் நாட்டுநடப்பு மேலும் நம்மை நாமே பட்டை தீட்டி கொள்வதற்கான ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி 1921ல் தான் நீதி கட்சியின் போது தான் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. அதன் பின் பெரியார் பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை கல்வி உயர்வு சமத்துவம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார். பெண்களுக்கென்று பல உரிமைகள் வேண்டும் என்று சட்டமன்றத்தில் முத்துலட்சுமி ரெட்டி எம்.எல்.ஏவாக இருந்த போது பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தார்.

அப்போது சில எதிர்ப்புகள் வந்தன. அதையும் மீறி பெண்களுக்கான பல உரிமைகள் வழங்கப்பட்டது. அவரோடு இணைந்து மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரும் இணைந்து பல்வேறு போராட்டங்களை நடத்தினார். அதன் மூலம் பெண்களின் அடிமை தினத்திலிருந்து விடுதலை கிடைத்தது. பெரியார் அண்ணா கலைஞர் போன்றவர்களால் இன்று பெண்களுக்கு பல்வேறு வளர்ச்சிகள் மட்டுமின்றி விடுதலை கிடைத்தது என்றே சொல்லலாம் சொத்தில் சமஉரிமை கொடுக்க வேண்டும் என்ற பெரியாரின் கோரிக்கையை 1989ல் கலைஞர் முதலமைச்சராக இருந்த போது சட்டமாக இயற்றினார். இப்போது பெண்களுக்கு சொத்தில் பங்கு கிடைக்கிறது. அதற்கு முன்பு அவர்களுக்கு அது இல்லாத நிலை இருந்தது. அதே போல் 1989ல் தான் மகளிர் சுயஉதவிக்குழு ஆரம்பிக்கப்பட்டு ஆண்களுக்கு நிகராக பெண்களும் சிறு தொழில்கள் செய்வதற்கென்று வழிவகை செய்து அடித்தளமிட்டவர் கலைஞர். அதே போல் கல்வி வேலைவாய்ப்புகளில் 30 சதவீதம் ஒதுக்கீடு 8 மற்றும் 12ம் வகுப்பு படித்தவர்களுக்கு திருமண உதவி இப்போது முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் 12ம் வகுப்பிற்கு பின் கல்லூரி படிப்பை தொடர்வதற்கு புதுமைப்பெண் திட்டத்தில் ரூபாய் ஆயிரம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இரண்டு கட்டம் தொடங்கி வைத்துள்ளார். இரண்டு ஆண்டு காலம் கல்லூரி படிப்பை ஓதுக்கி வைத்தவர்கள் 13 ஆயிரம் பேர் கல்லூரி படிப்பை தொடங்கியுள்ளனர். கிராமப்புறங்களை சார்ந்தவர்களும் வளர்ச்சியடையும் வகையில் வங்கியில் வாங்கியுள்ள மகளிர் சுயஉதவி கடன் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நரிக்குறவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டதன் மூலம் அவர்களின் குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் நிலை உருவாகியுள்ளது. வாழ்க்கையில் தோல்வியும் வரத்தான் செய்யும் அதையும் கடந்து சாதனை படைக்க வேண்டும். ஜாதி மதம் ஏழை பணக்காரன் பாகுபாடு இல்லாமல் ஒன்றே குலம் ஓருவனே தேவன் என்ற கோட்பாடோடு பணியாற்றி நாம் பெற்ற ஆண் பெண் குழந்தைகளை பாரபட்சமின்றி நல்ல அறிவுரைகளை வழங்கி வளர்க்க வேண்டும். சத்தாண உணவுகள் கொடுக்க வேண்டும் ஆடம்பரம் இல்லாமல் நாமும் அறிவுத்திறனை வளர்க்க வேண்டும் என்று பேசினார்.

விழாவில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணை மேயர் ஜெனிட்டா, மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் அன்னலட்சுமி, கலைச்செல்வி, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கஸ்தூரிதங்கம், மகளிர் தொண்டரணி அமைப்பாளர் உமாதேவி, மாநகர மகளிர் அணி அமைப்பாளர் ஜெயக்கனி, மாநகர துணைச்செயலாளர் பிரமிளா, கவுன்சிலர்கள் ஜான்சிராணி, ரெக்ஸின், ஜெயசீலி, சுப்புலட்சுமி, ஜெபஸ்டின் சுதா, வைதேகி, பவாணி மார்ஷல், மகேஸ்வரி, மெட்டில்டா, பாப்பாத்தி, மரியகீதா, ஜாக்குலின் ஜெயா, சரண்யா, நாகேஸ்வரி, விஜயலட்சுமி, கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர்கள் தனலட்சுமி, முத்துமாரி, மதிமுக கவுன்சிலர் ராமுஅம்மாள், இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் கவுன்சிலர் மும்தாஜ், மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் பார்வதி, தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் அருணாதேவி, மகளிர் அணியை சேர்ந்த நிர்வாகிகள் கவிதா தேவி, இந்திரா, பெல்லா, ரேவதி, சத்யா, கன்னிமரியாள், சந்தனமாரி, உள்பட மகளிர் அணியினர் திரளானோர் கலந்து கொண்டனர்.

Previous Post

எதிர்வரும் காலங்களில் அதிமுகவிற்கு துணை நிற்க வேண்டும் தூத்துக்குடி ஜெ பிறந்தநாள் விழாவில் சி.த.செல்லப்பாண்டியன் வேண்டுகோள்!!!

Next Post

காவல்துறையில் பணியாற்றி வரும் வாரிசுகளுக்கான சிறப்பு கல்வி உதவித் தொகையை மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் வழங்கினார்

Next Post
காவல்துறையில் பணியாற்றி வரும் வாரிசுகளுக்கான சிறப்பு கல்வி உதவித் தொகையை மாவட்ட எஸ்பி  பாலாஜி சரவணன் வழங்கினார்

காவல்துறையில் பணியாற்றி வரும் வாரிசுகளுக்கான சிறப்பு கல்வி உதவித் தொகையை மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் வழங்கினார்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In