ஆய்வக நுட்புனர் தினத்தை முன்னிட்டு சென்னை கிரிக்கெட் மைதானம் காமராஜர் சாலை அயோத்திநகர் திருவல்லிக்கேனி பிரசிடென்சி மைதானத்தில் பாரா மெடிக்கல் லேப் கல்வி மற்றும் நலச்சங்கம் சார்பில் நடைபெற்ற லேப் டெக்னீசியன் தினத்தை யொட்டி பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் போட்டி நடைபெற்றது.
விளையாட்டு போட்டிக்கு அகில இந்திய தலைவர் காளிதாசன் தலைமை வகித்தார். மாநில தலைவர் துரைசாமி முன்னிலை வகித்தார். மாநில மகளிர் அணி அமைப்பாளர் கலா வரவேற்புரையாற்றினார். சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுச்செயலாளர் இரவீந்திரநாத் கிரிக்கெட் போட்டியை துவங்கி வைத்தார். இதில் சேலம் மற்றும் திருப்பூர் ஆகிய இரண்டு மாவட்டங்களும் விளையாடினார்கள். இறுதியில் சேலம் மாவட்டம் அணி வெற்றி பெற்றது.
பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கூடுதல் தலைமை செயலாளர் உணவு நுகர்வோர் பாதுகாப்பு முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு உடற்பயிற்சி செய்தல் அவசியம், ஆரோக்கிய வாழ்வு குறித்து பேசி கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு கேடயங்களும் சான்றிதழ்களும் வழங்கினார்.

விழாவில் பொதுச் செயலாளர் விஜயகுமார், பொருளாளர் சம்பத்குமார் கரூர் மாவட்ட தலைவர் பாலசுப்ரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிவக்குமார், ஜெயராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

