வேதாரண்யம், மார்ச் 14
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் சார்பில் உலக மகளிர் தினத்தையொட்டி வாங்க பேசலாம் இலக்கிய அமர்வு நிகழ்ச்சி மார்ச் 12 ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
வேதாரண்யம் ஓய்வு பெற்ற அலுவலர் சங்க அலுவலக கட்டடத்தில் நடைபெற்ற விழாவுக்கு கவிஞர் வி.புவனேஸ்வரி தலைமை வகித்தார்.
தமிழ்த்துறை ஆய்வு மாணவி த.சுகன்யா,கவிஞர் ப.செளமியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நாள்தோறும் 120 கிலோ மீட்டர் தொலைவு இரு சக்கர மோட்டார் சைக்கிளில் பயணித்து மீன் வியபாரம் செய்யும் த.பஞ்சவர்ணம்,பாரம்பரிய நெல் ரகங்கள் மீட்பு, சிறுதானிய உணவு தயாரிப்பில் முனைப்புக்காட்டும் கத்தரிப்புலம் ஆர்.எஸ்.சித்ரா ஆகியோர் தங்களின் அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டனர்.
இவர்களை,அரசுக் கல்லூரி பேராசிரியை அ.மாரிமுத்து, சமூக செயல்பாட்டாளர் ஆசிரியை மு.வசந்தா ஆகியோர் கெளரவித்து பேசினர்.
ஓவியத்தில் முனைப்புக்காட்டும் கல்லூரி மாணவி நித்யா உள்பட மாணவ,மாணவியர் உரையாற்றினர்.கோவி.ராசேந்திரன்,ஆசிரியர் வீ.சதீஷ் உள்ளிட்டோர் பெண்ணியம் சார்ந்த பாடல்களை பாடினர்.

நிகழ்ச்சியில் பேராசிரியர் ப.பிராபாகரன்,கலை இலக்கியப் பெருமன்ற மாநிலக் குழு உறுப்பினர் எம்.ஆர்.சுப்பிரமணியம்,மாவட்டச் செயலாளர் தென்னடார் அம்பிகாபதி, மாவட்டப் பொருளாளர் கா.கைலாசம்,மாவட்டத் துணைத் தலைவர் ப.பார்த்தசாரதி, கவிஞர் வீ.கார்த்தி,ஆசிரியர் வீ.சத்யராஜ், ஜி.கே.பாலா, நல்லாசிரியர்கள் வீ.வைரக்கண்ணு,எஸ்.செல்வராசு,கிளை துணைச் செயலாளர் தி.செந்தில்நாதன், ந.மணிவண்ணன் உள்ளிட்டோர் பேசினர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

