நாகப்பட்டினம் மாவட்டத்தில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான அரசு பொதுத்தேர்வு நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நாகப்பட்டினம் மார்ச் 13
நாகப்பட்டினம் மாவட்டத்தில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான அரசு பொதுத்தேர்வு நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
2022-2023 ஆம் ஆண்டிற்குரிய மேல்நிலை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு 13.03.2023 முதல் துவங்கி 03.04.2023 வரையிலும், முதலாம் ஆண்டு பொது தேர்வுகள் 14.03.2023 முதல் துவங்கி 05.04.2023 வரையிலும் மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 06.04.2023 முதல் 20.04.2023 வரை நடைபெறுகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் 70 பளளிகளில் இருந்து பள்ளி மாணவர்களுக்கு 33 தேர்வு மையங்களும் தனி தேர்வர்களுக்கு ஒரு தேர்வு மையமும் மொத்தம் 34 மையங்கள் செயல்பட்டு வருகிறது. மேல்நிலை இரண்டாம் ஆண்டு 3891 மாணவர்களும் 4317 மாணவிகளும் என மொத்தம் 8208 மாணவ, மாணவிகள் தேர்வு எமுதுகின்றனர். மேல்நிலை முதலாம் ஆண்டு 3414 மாணவர்களும், 4118 மாணவிகளும் என மொத்தம் 7532 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 4547 மாணவர்களும், 4277 மாணவிகளும் என மொத்தம் 8824 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.
மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வில் 81 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு சொல்வதை எழுதுவதற்கு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 24 மாணவ, மாணவிகளுக்கு கூடுதல் ஒரு மணி நேரம் மற்றும் தரைத்தள வசதியில் தேர்வு எழுதும் சலுகை வழங்கப்பட்டுள்ளது. 29 மாணவ, மாணவிகளுக்கு ஆங்கில பாடம் எழுதுவதில் இருந்து விலக்கு வழங்கப்பட்டுள்ளது. மேல்நிலை முதலாம் ஆண்டு தேர்வில் 36 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு சொல்வதை எழதுவதற்கு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 21 மாணவ, மாணவிகளுக்கு கூடுதல் ஒரு மணி நேரம் மற்றும் தரைத்தள வசதியில் தேர்வு எழுதும் சலுகை வழங்கப்பட்டுள்ளது. 01 மாணவ, மாணவிகளுக்கு ஆங்கில பாடம் எழுதுவதில் இருந்து விலக்கு வழங்கப்பட்டுள்ளது. தேர்வு பணிகளில் 752 ஆசிரியர்களும், 43 தலைமை ஆசிரியர்களும் 74 அலுவலக பணியாளர்களும் மொத்தம் 879 நபர்களும், காவல்துறையைச் சேர்ந்த 55 காவலர்களும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தேர்வு எழுதும் அனைத்து மையங்களிலும் மின் தடை ஏற்படாத வகையில் தொடர் மின் வசதி ஏற்படுத்தவும், உரிய குடிநீர் வசதி, காற்றோட்ட வசதியுடன் கூடிய தேர்வுகள் மற்றும் கழிவறை வசதிகள் ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

இவ்வாய்வின்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எம்.கே.சி.சுபாஷினி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

