• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் பட்டினச்சேரி மீனவர் கிராம கடற்கரையில் அமைந்துள்ள சி.பி.சி.எல். பொதுத்துறை நிறுவனத்திற்கு சொந்தமான எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் கடலில் கலந்தது தொடர்பான நடவடிக்கை குறித்து மாண்புமிகு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் முன்னாள் படை வீரர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு

policeseithitv by policeseithitv
March 8, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் பட்டினச்சேரி மீனவர் கிராம கடற்கரையில் அமைந்துள்ள சி.பி.சி.எல். பொதுத்துறை நிறுவனத்திற்கு சொந்தமான எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் கடலில் கலந்தது தொடர்பான நடவடிக்கை குறித்து மாண்புமிகு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் முன்னாள் படை வீரர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் பட்டினச்சேரி மீனவர் கிராம கடற்கரையில் அமைந்துள்ள சி.பி.சி.எல். பொதுத்துறை நிறுவனத்திற்கு சொந்தமான எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் கடலில் கலந்தது தொடர்பான நடவடிக்கை குறித்து மாண்புமிகு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் முன்னாள் படை வீரர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நாகப்பட்டினம் மார்ச் 8

தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் என்.கௌதமன் கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி ஆகியோர் உடன் உள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் பட்டினச்சேரி மீனவர் கிராம கடற்கரையில் அமைந்துள்ள சி.பி.சி.எல். பொதுத்துறை நிறுவனத்திற்கு சொந்தமான எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் கடலில் கலந்தது தொடர்பான நடவடிக்கை குறித்து மாண்புமிகு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் முன்னாள் படை வீரர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் என்.கௌதமன்; கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி ஆகியோர் உடன் உள்ளனர்.

இந்த ஆய்வி;ன் போது மாண்புமிகு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றதுறை மற்றும் முன்னாள் படை வீரர் நலத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது:

நாகப்பட்டினம் வட்டம் நாகூர் பட்டினச்சேரி மீனவர் கிராம கடற்கரையில் சி.பி.சி.எல் பொதுத்துறை நிறுவனத்திற்கு சொந்தமான எண்ணெய் குழாய் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இக்குழாய் வழியாக கச்சா எண்ணெய் ஆனது காரைக்கால் மார்க் துறைமுகம் கொண்டு சென்று கப்பல் வழியே சென்னைக்கு அனுப்பப்படுகிறது. இந்நிலையில் கடந்த 02.03.2023 அன்று இரவு 9 மணி அளவில் இக்குழாயில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணையானது கடலில் கலந்த தகவல் அறிந்தவுடன் நாகப்பட்டினம் வருவாய் துறை மற்றும் காவல் துறை அலுவலர்கள் நாகூர் பட்டினச்சேரி கடற்கரை சென்று மீனவர்களை அப்புறப்படுத்தும் பணி பார்க்கப்பட்டது. மேலும் பொது மேலாளர் சிபிசிஎல் நிறுவனத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு எண்ணெய் கசிவினை சரி செய்ய அறிவுறுத்தப்பட்டது.இந்நிலையில் கச்சா எண்ணெய் கசிவினை தொடர்ந்து 03.03.2023 முதல் மீனவர்கள் மீன் பிடிக்க செல்வதில்லை என மீனவ பஞ்சாயத்தாரர்களால் தீர்மானிக்கப்பட்டு மீன் பிடிக்க செல்லவில்லை. பட்டினச்சேரி மீனவர் கிராமத்தில் 1334 மீனவக் குடும்பங்களில் சுமார் 4700 மீனவர்கள் 600 மீன்பிடி படகுகள் கொண்டு மீன்பிடி தொழிலையே பிரதான தொழிலாக கொண்டு வாழ்ந்து வருகின்றனர். அதனைத் தொடர்ந்து 03.03.2023 அன்று மீனவர்களிடம் சார் ஆட்சியர் தலைமையில் மீன்வள மற்றும் மீனவர் நலத்துறை வருவாய் துறை மற்றும் காவல் துறை அலுவலர்களைக் கொண்டு நாகூர் பட்டினச்சேரி மீனவர் கிராமத்தில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தப்பட்டு இந்நிகழ்வு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவரிக்கப்பட்டது. சட்டம் ஒழுங்கினை பாதுகாக்கும் நோக்கத்துடன் தஞ்சை சரக துணைத்தலைவர் காவல்துறை டிஐஜி மற்றும் காவல் கண்காணிப்பாளர் திருவாரூர் (கூடுதல் பொறுப்பு) ஆகியோர்கள் நேரில் ஆய்வு செய்து முகாமிட்டு பணியினை துரிதப்படுத்தினார்கள். மேலும் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் மீனவர்களை சந்தித்து பேசி தமிழக அரசால் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை குறித்து விவாதித்தார். தொடர்ந்து சென்னை மணலி நிறுவனத்திலிருந்து தொழில்நுட்ப வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு 04.03.2023 மற்றும் 05.03.2023 ஆகிய நாட்களில் எண்ணெய் குழாய் கசிவானது முற்றிலும் சரி செய்யப்பட்டது.

இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித் தலைவர் 06.03.2023 அன்று நேரடியாக பார்வையிடப்பட்டு எண்ணை குழாய் கசிவு சரி செய்யப்பட்ட பணியானது உறுதி செய்யப்பட்டது. மாவட்ட ஆட்சியர் பின்னர் மீனவர்களை சந்தித்து இந்த குழாய் முற்றிலுமாக அகற்றப்படும் என மீனவர்களிடம் உறுதி அளித்தார்.

தமிழக அரசியல் செய்த முயற்சியால் 06.03.2023 அன்று கடல்வளம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்காமல் இருந்திட நடவடிக்கை எடுத்திடும் பொருட்டு தமிழக அரசு சுற்றுச்சூழல் துறை மற்றும் மத்திய அரசு நிலையான கடற்கரை மேலாண்மைக்கான தேசிய மையம் தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்திலிருந்து தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள் நேரில் வந்து நீர் மற்றும் மண் மாதிரிகள் பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டது.

இந்நிலையில் மீனவர்கள் அறிவித்த சி.பி.சி.எல். நிறுவனம் முற்றுகை போராட்டம் தொடர்பாக நாகப்பட்டினம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் 06.03.2023 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் அவர்கள் முன்னிலையில் மற்றும் சி.பி.சி.எல். நிறுவனத்துடன் நாகப்பட்டினம் வட்ட மீனவர்களுடன் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தப்பட்டு மீன்பிடிக்க செல்வது என மீனவர்களால் உறுதி அளிக்கப்பட்டு நாகூர் பட்டினச்சேரி மீனவர்கள் இன்று முதல் மீன் பிடிக்க சென்றனர் என மாண்புமிகு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றதுறை மற்றும் முன்னாள் படை வீரர் நலத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வி.ஷகிலா மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் ம.பிரதிவிராஜ் நாகப்பட்டினம் நகர்மன்ற துணைத்தலைவர் செந்தில்குமார் வட்டாட்சியர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்

எல்விஸ் லாய் மச்சோடா.

Previous Post

குலதெய்வ சாஸ்தா வழிபாடு:பங்குனி உத்திரத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்க கலெக்டரிடம் கோரிக்கை

Next Post

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் தலைவர் வசுமதி அம்பா சங்கர் தலைமையில் நடைபெற்றது.

Next Post
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் தலைவர் வசுமதி அம்பா சங்கர் தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் தலைவர் வசுமதி அம்பா சங்கர் தலைமையில் நடைபெற்றது.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In