தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. தூத்துக்குடி மடத்தூர் பூர்வீககுடி மக்கள் சார்பில் ஜெயசுந்தரபாண்டி கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தார்.
அந்த மனுவில், தூத்துக்குடி மடத்தூர் பூர்வீககுடி மக்கள் சுமார் 1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். இதே போன்று மாவட்டம் முழுவதும் இந்து சமூகத்தினர் பங்குனி உத்திரம் அன்று, அவரவர் குலதெய்வம் சாஸ்தா கோவில்களுக்கு செல்வது வழக்கம். அன்றைய தினத்தில் சாஸ்தா கோவில்களில் காலை முதல் இரவு வரை பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இதற்காக புலம் பெயர்ந்த குடும்பத்தினரும் தூத்துக்குடிக்கு வருவார்கள்.
அன்றைய நாளில் மாணவர்கள், அரசு அலுவலர்கள் உள்பட அனைவரும் கோவிலுக்கு சென்று வழிபட முடியாத நிலை உள்ளது. ஆகையால் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திரம் அன்று உள்ளூர் விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

