தூத்துக்குடி.
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம், புதுக்கோட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய குழு கூட்ட அரங்கில் நடைபெற்றது. ஒன்றிய குழு தலைவர் வசுமதி அம்பாசங்கர் தலைமை வகித்தார். ஒன்றிய குழு துணைத் தலைவர் ஆஸ்கர், வட்டார வளர்ச்சி அலுவலர் ராம்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வடக்கு காலாங்கரை ஊராட்சி ஒன்றிய பள்ளி சாலை அமைத்தல், குமாரகிரி ஊராட்சி கூட்டாம்புளி அம்மன் கோவில் கீழ் பகுதி தெரு வரை பேவர் பிளாக் சாலை அமைத்தல், கூட்டாம்புளி மேலத்தெரு பொன்ராஜ் நகர் முதல் வாட்டர் டேங் வரை தார்சாலை அமைத்தல், இராமசந்திரபுரம் வடக்கு தெரு யாதவர் வீடு முதல் மாரியப்பன் என்பவர் வீடு வரை தார்சாலை அமைத்தல், வடக்கு காலாங்கரை வடக்கு தெரு வடக்குவாச் செல்வி அம்மன் கோவில் முதல் பள்ளி கூடம் வழியாக பண்டாரம் வீடு வரை சிமெண்ட் ரோடு அமைத்தல், வடக்கு காலாங்கரை டிவி ரூம் ராமசாமி வீடு முதல் பண்டாரம் வீடு வரை சிமெண்ட் ரோடு அமைத்தல், வடக்கு காலாங்கரை வடக்கு தெரு ஊர் தலைவர் பொன்ராஜ் அப்பா வீடு முதல் செல்வம் வீடு வரை சிமெண்ட் ரோடு அமைத்தல், குமாரகிரி ஊராட்சி கூட்டாம்பளி சர்ச் தெருவில் பேவர் பிளாக் சாலை அமைத்தல், மாப்பிள்ளையூரணி ஊராட்சி வண்ணாரப்பேட்டை ஸ்ரீமுனியசாமி கோவில் தெரு மற்றும் சன்னாசி வீட்டு தெரு முதல் சாலை அமைத்தல், மாப்பிள்ளையூரணி ஊராட்சி கிழக்கு காமராஜ்நகர் தெருக்களில் பேவர் பிளாக் சாலைகள் அமைத்தல், கோரம்பள்ளம் பக்கிள் ஓடையில் அருகே சிறு பாலம் அமைத்தல், முடிவைத்தானேந்தல் ஊராட்சி நாராயணன் வீடு முன்பு இருந்து சொரிமுத்து பிள்ளை வீடு வரை பேவர் பிளாக் சாலை அமைத்தல், கூட்டுடன்காடு ஊராட்சி மேலக்கூட்டுடன்காடு மெயின் தெருவில் தார்சாலை அமைத்தல், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மேற்கு காமராஜ்நகர் ரேசன் கடையிலிருந்து 09ஃ1019 வீடு வரை தார்சாலை அமைத்தல், மாப்பிள்ளையூரணி ஊராட்சி ஏ.பி.சி.காலேஜ் ரோடு தார்சாலை அமைத்தல், மாப்பிள்ளையூரணி ஊராட்சி சமீர்வியாஸ்நகர், சேசுநகர் சந்திப்பில் பல்நோக்கு கட்டிடங்கள் கட்டுதல், கூட்டுடன்காடு ஊராட்சி அய்யனார் காலனி கிழக்கு பகுதிகளில் 1,2,3 தெருக்களில் பேவர் பிளாக் சாலை அமைத்தல், தாளமுத்து நகர் கடற்கரையில் தொழில்புரியும் மீனவர்களின் டூ வீலர் நிறுத்தம் ஷெட் அமைத்தல், மாப்பிள்ளையூரணி ஊராட்சி டி.சவேரியார்புரம் புதிய ரேசன் கடைக்கு அருகில் அடிபம்ப் அமைத்தல், மாப்பிள்ளையூரணி ஊராட்சி தாய்நகர் ஊர் பொது இடத்தில் அடிபம்ப் அமைத்தல், கூட்டுடன்காடு ஊராட்சி நடுக்கூட்டுடன்காடு கிராமத்தில் தெற்கு தெருக்களில் பேவர் பிளாக் சாலை அமைத்தல், குமாரகிரி ஊராட்சி சிறுப்பாடு சவேரியார்புரத்தில் பேவர் பிளாக் சாலை அமைத்தல், கூட்டுடன்காடு ஊராட்சி நடுக்கூட்டுடன்காடு ஸ்ரீநாராயண சுவாமி கோவில் தார்சாலை அமைத்தல், அல்லிகுளம் ஊராட்சியில் அல்லிகுளம் கிராமத்தில் வடக்கு தெருவில் பேவர் பிளாக் சாலை அமைத்தல் உள்பட 31 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, சாலை விபத்தில் இறந்த பணியாளருக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அந்தோணி தனுஸ்பாலன் பேசுகையில்: மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் அரசு சார்பில் 1 முதல் 5 வரை மாணவ-மாணவியர்கள் படிக்கும் பள்ளி மட்டுமே உள்ளது. அது உயர்நிலைப்பள்ளியாக மாற்றித்தர வேண்டும் என்ற கோரிக்கையுடன் தாளமுத்துநகர் கடற்கரை பகுதியில் இருசக்கர வாகனம் ஒழுங்குமுறை இல்லாமல் இருந்ததை வாகன நிறுத்த காப்பகம் அமைக்கப்படும் என்று ஒன்றியக் குழு கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வந்ததற்கு ஒன்றியக்குழு தலைவருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார். உயர்நிலைப்பள்ளியாக உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டார வளர்ச்சி அலுவலர் ராம்ராஜ் பதிலுரை வழங்கினார்.
கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் சுதர்சன், ஆனந்தி, முத்துமாலை, அந்தோணி தனுஷ் பாலன், ஜெயகணபதி, மரிய செல்வி, முத்துக்குமார், முத்துலட்சுமி, செல்வபார்வதி, நர்மதா, உதவி பொறியாளர் செந்தில்குமார், மேற்பார்வையாளர்கள் முத்துராமன், சுப்பிரமணியன், யூனியன் மேலாளர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி செய்தியாளர் சண்முகசுந்தரம் ஒன்றிய குழு தலைவர் வசுமதி அம்பாசங்கருக்கு சால்வை கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

