சட்டமன்ற தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் நடைபெறும் இடத்தில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து விளாத்திகுளம் டி.எஸ்.பி, வட்டாட்சியர் ஆலோசனை செய்யப்பட்டது.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்2021 முன்னிட்டு விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு வருகின்ற 12.03.2021அன்று முதல் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்யபடுகிறது
அது சம்மந்தமாக விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் வட்டாட்சியர் திரு. ரகுபதி அவர்களுடன் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. பின்பு விளாத்திகுளம் காவல்ஆய்வாளர் திரு. ரமேஷ் அவர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டது.
செய்தி: ஆத்திமுத்து

