நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குறிச்சி கிராமத்தில் கோமாரி நோய் 3வது சுற்று கால் மற்றும் வாய்நோய் தடுப்பூசி முகாமினை
மாவட்ட ஆட்சித்தலைவர்
டாக்டர் அ.அருண்தம்புராஜ், இன்று தொடங்கி வைத்தார்.
நாகப்பட்டினம் மார்ச் 1
நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குறிச்சி கிராமத்தில் கோமாரி நோய் 3வது சுற்று கால் மற்றும் வாய்நோய் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ், இன்று தொடங்கி வைத்தார்.
இம்முகாமினை துவக்கி வைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது,கோமாரி நோய் மிககொடிய வைரஸ் கிருமிகள் மூலம் பிளவுபட்ட குளம்புகள் உடைய பசு, எருமை, வெள்ளாடு போன்ற இனங்களை எளிதல் தாக்கக்கூடிய ஒன்று. மேலும், இது காற்று மற்றும் தண்ணீர் மூலம் மிக விரைவாக பரவக்கூடிய தன்மை உடையது. இந்நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளின் வாயிலும் நாக்கிலும் கால்குளம்புகளுக்கு இடையிலும் புண்கள் ஏற்படும். இதனால் தீவனம் உட்கொள்ள இயலாமல் எளிதில் மெலிந்துவிடும். வெயில் காலங்களில் மூச்சிரைச்சல், புறத்தோல் தன்மை அடர்த்தியாகவும், அடர்ந்த ரோமங்களுடனும் காணப்படும். பால் உற்பத்தி முற்றிலும் குறைந்துவிடும். பாலூட்டும் கன்றுகள் உடனடியாக இறந்துவிடும். மலட்டுத் தன்மை ஏற்படும். கால்நடை வளர்ப்போர்க்கு மிக பெரிய பொருளாதார இழப்பு ஏற்படும்.

எனவே, இந்நோய் வராமல் தடுப்பதற்கு கால்நடைகளுக்கு வருடத்திற்கு இரண்டுமுறை தடுப்பூசி மேற்கொள்வது சிறந்த வழியாகும். எனவே நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுமார் ஒரு இலட்சம் கால்நடைகளுக்கு தடுப்பூசி பணி மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டு மருந்து இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. இம்முகாம் மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் நடைபெற உள்ளது. இன்றைய தினம் நாகப்பட்டினம் வட்டம் குறிச்சி, ஆய்மழை சுற்றியுள்ள கிராமத்தில் சுமார் 250 கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டது என நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.இம்முகாமில் கால்நடைத்துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர் எம்.விஜயகுமார், உதவி இயக்குநர் ஹசன் இப்ராகிம் மற்றும் கால்நடை உதவி மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

