வேதாரணியம் மார்ச் 1
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கருப்பம்புலம்
அகரம் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவ மாணவிகள் வேதாரணியம் சன்னதி கடற்கரையில் தூய்மை பணி மேற்கொண்டனர்.கடற்கரையில் இருக்கும் பிளாஸ்டிக் பொருள்கள், பிளாஸ்டிக் கேரி பேக் ஆகியவற்றை மாணவ மாணவிகள் சேகரித்து நகராட்சி பணியாளர்களிடம் ஒப்படைத்தனர். இந்த தூய்மைப் பணியில் அகரம் மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளர் பி.வி.ஆர். விவேக் வெங்கட்ராமன்,பள்ளி முதல்வர் டாக்டர் வெற்றிச்செல்வி,பள்ளிச் செயலாளர் மகேஸ்வரி விவேக் வெங்கட்ராமன்,
வேதாரண்யம் நகராட்சி ஆணையர் ஹேமலதா,பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.பின்னர் நகராட்சி ஆணையர் பள்ளி மாணவ மாணவிகளை
நுண்ணுயிர் உரக்கிடங்கிற்கு
அழைத்துச் சென்று மக்கும் குப்பைகள் மக்காத குப்பைகள் ஆகியவற்றை பிரித்து எடுப்பது
எப்படி என்பது பற்றி எடுத்துரைத்தார்கள். போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

