தூத்துக்குடி
தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழிகாட்டுதலின்படி மாப்பிள்ளையூரணி ஊராட்சி முழுவதும் திமுக கொடியேற்றி கேக் வெட்டி இனிப்புகள் வழங்கப்பட்டது. தாளமுத்துநகர் மெயின் சாலையில் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும் ஊராட்சி மன்ற தலைவருமான கூட்டுறவுகடன் சங்க தலைவர் சரவணக்குமார் தலைமையில் கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினார். பின்னர் பல்வேறு பகுதிகளில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி பின்னர் மாப்பிள்ளையூரணியில் உள்ள பள்ளி குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினார்.


நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதிகள் சிவக்குமார், தர்மலிங்கம், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் ஆரோக்கியமேரி, ஒன்றிய அமைப்பாளர் ஜெஸிந்தா, ஒன்றிய அவைத்தலைவர் ஜோதிடர் முருகன், துணைச்செயலாளர் ராமசந்திரன், பொருளாளர் மாரியப்பன், ஓன்றிய கவுன்சிலர் அந்தோணி தனுஷ்பாலன், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, மகேஸ்வரி காமராஜ், பெலிக்ஸ், தங்கமாரிமுத்து, தங்கபாண்டி, ஜேசுராஜா, பாலம்மாள், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ஸ்டாலின், கிளைச்செயலாளர்கள் காமராஜ், மகாராஜா, சரவணன், இம்மானுவேல், உலகநாதன், கருப்பசாமி, ஆனந்தம், பாலுநரேன், முருகன், வேல்ராஜ், ராமமூர்த்தி, முத்துராஜ், பிரபாகர், காசி, மூர்த்தி, முருகவேல்ராஜ், இசக்கி முத்து என்ற செல்வம், பிரன்சிகர், பூசாரி முருகன், வெற்றிவேல், கதிர்வேல், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆனந்தகுமார், ஆசைதம்பி, ஜெயசீலன், இளைஞர் அணி ஆனந்த், மற்றும் வளர்மதி, ரூபி, அங்காளஈஸ்வரி, ராயப்பன், பொன்ராஜ், நேசையா, செல்வக்குமார், கௌதம், மைக்கேல், குரூஸ், ராஜ், மணி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

