• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்  டாக்டர் அ.அருண்தம்புராஜ், தலைமையில் இன்று நடைபெற்றது.

policeseithitv by policeseithitv
February 28, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்   டாக்டர் அ.அருண்தம்புராஜ், தலைமையில் இன்று நடைபெற்றது.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்

டாக்டர் அ.அருண்தம்புராஜ், தலைமையில் இன்று நடைபெற்றது.

 

நாகப்பட்டினம் பிப்ரவரி 28

 

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.

பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான கௌரவ நிதித்திட்டத்தின் கீழ் விவசாய குடும்பத்திற்கு மூன்று தவணையாக தலா ரூ.2000 வீதம் ஆண்டிற்கு ரூ.6000 வழங்கப்படுகிறது. அடுத்தடுத்த தவணைத் தொகையை தொடர்ந்து பெறுவதற்கு ஆதார் எண்ணுடன் கைபேசி எண் மற்றும் வங்கி கணக்கு எண்ணை இணைத்து கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொண்டவர்களுக்கே 13ஆவது தவணைத் தொகை விடுவிக்கப்படும். எனவே இத்திட்டத்தில் தொடர்ந்து பயன்பெற விவசாயிகள் உடனடியாக தங்கள் பகுதிக்கு அருகாமையில் உள்ள பொது இ-சேவை மையம் அல்லது தபால் நிலையங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் இதுவரை நாகப்பட்டினம் வட்டாரத்தில் 7 கிராம ஊராட்சிகளிலும், திருமருகல் வட்டாரத்தில் 11 கிராம ஊராட்சிகளிலும், கீழ்வேளுர் வட்டாரத்தில் 10 கிராம ஊராட்சிகளிலும், கீழையூர் வட்டாரத்தில் 7 கிராம ஊராட்சிகளிலும், தலைஞாயிறு வட்டாரத்தில் 6 கிராம ஊராட்சிகளிலும், வேதாரண்யம் வட்டாரத்தில் 10 கிராம ஊராட்சிகளிலும் ஆக மொத்தம் 51 கிராம ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள 51 கிராம ஊராட்சிகளிலும் கடந்த 19.01.2023 அன்று ஒருங்கிணைந்த சிறப்பு முகாம் ஒவ்வொரு வட்டாரத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள் மூலம் நடத்தப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் திருமருகல் வட்டாரம் திருச்செங்காட்டாங்குடி கிராமத்தில் நடைபெற்றது. அடுத்த ஒருங்கிணைந்த சிறப்பு முகாம் 51 கிராம ஊராட்சிகளிலும் 09.03.2023 அன்று நடைபெற உள்ளது.

இத்திட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட கிராமங்களில் வேளாண்மை – உழவர் நலத்துறை மூலம் பண்ணை கருவிகளான கடப்பாறை (1 எண்), இரும்பு சட்டி (1 எண்), களைக்கொத்தி (1 எண்), மண்வெட்டி (1 எண்) மற்றும் கதிர்அருவாள் (1 எண்) ஆகியன ரூ.3000 மதிப்பில் ஒரு தொகுப்பாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதில் விவசாயிகளுக்கு 90 சத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சத மானியமும் அனுமதிக்கப்படும்.

இத்திட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட கிராமங்களில் தானியங்களை சேமித்து பாதுகாப்பு செய்யும் பொருட்டு ரூ.4,956 மதிப்பில் 8ழூ6 மீட்டர் அளவிலான தார்ப்பாய் 50 சத மானியமாக ரூ.2,100 என்கிற விகிதத்தில் விநியோகம் செய்யப்படும். மேலும் இத்திட்டத்தின் கீழ் பயிர்களுக்குத் தேவையான உரம், தென்னைக் கன்றுகள், பயறுவிதைகள் மற்றும் பல இடுபொருட்கள் மானிய விலையிலும், விலையில்லாமலும் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் இத்திட்டத்தில் வேளாண்மை – உழவர் நலத்துறையையும் சேர்த்து 17 துறைகள் இதில் இணைந்து செயல்படுத்தும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் 2022-23ஆம் ஆண்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு சாகுபடிக்கு போக மீதமுள்ள நிலங்களில் வனப்பரப்பினை அதிகரிக்கும் வகையில் வேளாண் காடுகள் உருவாக்கிட 100 சத மானியத்தில் வேம்பு, தேக்கு, செம்மரம், மகாகனி, ஈட்டி மரம், வேங்கை மற்றும் மலை வேம்பு ஆகிய மரக்கன்றுகள் வனத்துறை நாற்றுப்பண்ணை மூலமாக இலவசமாக வழங்கப்படும். அதிகபட்சமாக ஒரு நபருக்கு ஒரு எக்டேருக்கு 400 மரக்கன்றுகள் வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் “உழவன் செயலி“ மூலமாக முன்பதிவு செய்து (அல்லது) வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து பயன்பெறலாம். வழங்கப்படும் மரக்கன்றுகளில் உயிருடன் இருக்கும் மரக்கன்றுகளுக்கு மட்டும் அடுத்த 3 ஆண்டுகளுக்கு ஒரு கன்றுக்கு ரூ.7வீதம் பராமரிப்பு மானியம் வழங்கப்படும். 2022-23ஆம் ஆண்டிற்கு இத்திட்டத்தில் 710 விவசாயிகள் 99,660 மரக்கன்றுகள் கேட்டு பதிவு செய்துள்ளனர். இதில் 12 விவசாயிக்கு 4325 கன்றுகள் வழங்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் சம்பா தாளடி நெற்பயிருக்கு இதுவரை 61,407 ஹெக்டேர் பரப்பிற்கு 68,593 விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துள்ளனர். உளுந்து மற்றும் பச்சைப் பயறுக்கு 28,825 ஹெக்டேருக்கு 26,374 விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துள்ளனர். மேலும் நிலக்கடையில் 716.5 ஹெக்டேருக்கு 1511 விவசாயிகளும், பருத்தியில் 10.395 ஹெக்டேர் பரப்பிற்கு 43 விவசாயிகளும் பயிர் காப்பீடு செய்துள்ளனர்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வி.ஷகிலா, மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் க.பா.அருளரசு, வேளாண்மை இணை இயக்குநர் ஜா.அக்கண்டராவ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தேவேந்திரன், விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்

எல்விஸ் லாய் மச்சோடா.

Previous Post

நாகப்பட்டினம் மாவட்டம்  நம்பியார்நகர் மீனவ கிராமத்திலிருந்து நாட்டுப்படகில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் மீது இலங்கை நாட்டைச் சேர்ந்த நபர்களால் தாக்கப்பட்டு படுகாயமுற்ற மீனவருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலி;ருந்து ரூ.50,000 க்கான நிவாரணத்தொகையினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ், மற்றும் மீன்வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன் ஆகியோர் இன்று வழங்கினர்.

Next Post

முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி மாப்பிள்ளையூரணியில் சரவணக்குமார் கேக் வெட்டி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

Next Post
முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி மாப்பிள்ளையூரணியில் சரவணக்குமார் கேக் வெட்டி  பொது மக்களுக்கு  இனிப்பு வழங்கினார்.

முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி மாப்பிள்ளையூரணியில் சரவணக்குமார் கேக் வெட்டி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In