நாகப்பட்டினம் மாவட்டம்
நம்பியார்நகர் மீனவ கிராமத்திலிருந்து நாட்டுப்படகில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் மீது இலங்கை நாட்டைச் சேர்ந்த நபர்களால் தாக்கப்பட்டு படுகாயமுற்ற மீனவருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலி;ருந்து ரூ.50,000 க்கான நிவாரணத்தொகையினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ், மற்றும் மீன்வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன் ஆகியோர் இன்று வழங்கினர்.
நாகப்பட்டினம் பிப்ரவரி 27
நாகப்பட்டினம் மாவட்டம் நம்பியார்நகர் மீனவ கிராமத்திலிருந்து நாட்டுப்படகில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் மீது இலங்கை நாட்டைச் சேர்ந்த நபர்களால் தாக்கப்பட்டு படுகாயமுற்ற மீனவருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலி;ருந்து ரூ.50,000 க்கான நிவாரணத்தொகையினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ், மற்றும் மீன்வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன் ஆகியோர் இன்று வழங்கினர்.
நாகப்பட்டினம் மாவட்டம், நம்பியார்நகர் மீனவ கிராமத்திலிருந்து 06 மீனவர்கள் 14.02.2023 அன்று நாட்டுப்படகில் மீன்பிடிக்க சென்று 15.02.2023 அன்று தோப்புத்துறை அருகே மீன்பிடிக்கும்போது, இலங்கை நாட்டைச் சேர்ந்த நபர்களால் மீனவர்கள் தாக்கப்பட்டு மீன்பிடி உபகரணங்கள் அபகரிக்கப்பட்டது.இத்தாக்குதலில் நம்பியார்நகர் மீனவ கிராமத்தைச் சேர்ந்த முருகன் த/பெ.ராஜாங்கம் என்பவருக்கு தலை மற்றும் இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து, மீனவருக்கு நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர், கோயம்புத்தூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறப்பட்டது. இந்நிகழ்வில் படுகாயமுற்ற முருகன் த/பெ.ராஜாங்கம் என்பவருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலி;ருந்து ரூ.50,000 வழங்கிட மாண்புமிகு முதல்வர் அவர்களால் உத்தரவிடப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரால் ரூ.50,000 (ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்) முருகன், த/பெ.ராஜாங்கம் என்பவருக்கு நிவாரணத்தொகையினை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மீன்வளர்ச்சி கழக தலைவர் ஆகியோர் இன்று வழங்கினர்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, நகர்மன்றத் தலைவர் இரா.மாரிமுத்து, மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறை இணை இயக்குநர் த.இளம்வழுதி, உதவி இயக்குநர் கோ.ஜெயராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

