நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.
நாகப்பட்டினம் பிப்ரவரி 27
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.
வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மொத்தம் 214 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.

அதனைத்தொடர்ந்து வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வேதாரண்யம் வட்டம், அண்டர்காடு, மறைஞானநல்லூர் கிராமத்தை சேர்ந்த குணசேகரன் த/பெ முருகையாபிள்ளை என்பவர் சவூதி அரேபியா நாட்டில் இறந்ததற்காக அவரது மனைவி பிரேமலதா என்பவரிடம் தமிழக அரசிடமிருந்து வரப்பெற்ற இழப்பீட்டுத் தொகை ரூ.58,952 க்கான காசோலையினையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 5 மாற்றுத்திறனாளிக்கு ரூ.9,050 மதிப்பீட்டில் மூன்று சக்கர சைக்கிளையும், 5 மாற்றுத்திறனாளிக்கு ரூ.6,100 மதிப்பீட்டில் தையல் இயந்திரத்தினையும், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் நாகூர் சம்பா தோட்டம் பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு வீட்டிற்கான 10 பயனாளிகளுக்கு ஒதுக்கீட்டு ஆணையினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வி.ஷகிலா, சமூக பாதுகாப்பு துணை ஆட்சியர் கு.ராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சு.ராமன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

