தூத்துக்குடி
திராவிட இயக்கத் தமிழர் பேரவை இளைஞர் அணி திராவிட நட்புகழகம் சார்பில் மதநல்லிணக்க சமூக ஒற்றுமை மாநாடு தனியார் திருமண மண்டபத்தில் தூத்துக்குடியில் நடைபெற்ற நிறைவரங்க நிகழ்ச்சிக்கு திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சு.ப. வீரபாண்டியன் தலைமை வகித்தார். பாபு, எட்வின், மாறன், முத்தையா, குமரன், இளங்கோவன், கருப்பையா, மணிவண்ணன், ஜெகநாதன், கணேசன், சரவணன், ஆனந்த், விஷ்னு, செல்லப்பா, மாரியப்பன், சீதாராமன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திராவிட நட்புக்கழக தென்மண்டல அமைப்பாளர் தனிஸ்லாஸ் வரவேற்புரையாற்றினார். கனிமொழி எம்.பி, பேசுகையில் மதநல்லிணக்க மாநாடு என்பது சமூகத்திற்கு எடுத்துச் செல்லும் மாநாடு பெரியார் அண்ணா கலைஞர் வழியில் இதைத்தொடர்ந்து பாதுகாத்து கொண்டிருக்கிறோம். இந்தியாவில் பாதுகாப்பு சூழல் இல்லை மதம் நம் பக்கம் இருப்பதாக கூறி காழ்ப்புணர்ச்சி மூலம் அரசியல் அதிகாரம் செய்து வருகின்றனர். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தின் போதே பிராமணர்கள் நெல்லூரில் மட்டும் 32 பேர் பணியாற்றியுள்ளனர். இன்று நாம் அமைச்சர் மாநில தலைமை என பலவற்றிலும் சமூகநீதி உருவாக்கப்பட்டு வளர்ந்து கொண்டிருக்கிறோம். இழந்த அதிகாரத்தை மீட்டெடுக்க மதவெறி காழ்ப்புணர்ச்சிகளை விதைக்கின்றன. கடவுள் மத நம்பிக்கையை நாம் முடிவு செய்து கொள்ள வேண்டும். அதை மக்கள் மீது திணிக்க கூடாது. அவர்களது அடிப்படை உரிமைகளை பறிக்கும் செயலாகும் மதமாற்றமே ஒரு குற்றம் தான் இந்துக்கள் வழிபடுவதிலும் ஒவ்வொரு வேறுபாடு உண்டு உணவு கலாச்சாரம் வகையிலும் நமக்கான உடை உணவு மொழி அது நம்மை சார்ந்தது. இந்த பண்பாடுகளில் எல்லா உரிமைகளை செலுத்தி அவர்களுக்கு உரிமை இல்லாமல் பறித்து கொள்ளும் செயலில் ஈடுபடுகின்றன. பாராளுமன்றத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் வருவதில்லை எதிர்கட்சிகளில் கருத்துக்களை கேட்பதும் இல்லை. நாம் மெஜாரிட்டியாக இருக்கிறோம் என்ற தோணியில் பல மசோதாக்களை அறிமுகப்படுத்தும் போது அது சம்பந்தமாக பேசுவதற்குள் தீர்மானத்தை நிறைவேற்றி முடித்து விடுகின்றனர். முத்தலாக் சட்டம் கொண்டு வந்து இஸ்ஸாமியர் உரிமையை பறிக்கின்றனர். இப்படி கிறிஸ்தவர்கள் இந்துக்கள் என அவர்களது உரிமைகளையும் பல வகையில் பறித்து தான் சொல்லுவதைதான் கேட்க வேண்டும் என்று நினைக்கின்றனர். பிஜேபி எம்.பிக்கள் பலர் குற்றவழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் தான் இருக்கின்றனர். நாம் ஏதாவது கேள்வியை கேட்டால் வேறு பதில்களை கூறி திசைதிருப்புகின்றனர். இந்த நாட்டை நாம் காப்பாற்றியாக வேண்டும். விபத்தை நோக்கிதான் சென்று கொண்டிருக்கிறது. இதே ஆட்சி மறுபடியும் திரும்பி வந்தால் நம்முடைய எதிர்காலம் சமூகநீதி மதநல்லிணக்கம் பறி போகிவிடும். தமிழகத்தில் உள்ள கலாச்சாரங்கள் சமூக ஒற்றுமை மதநல்லிணக்கத்தை இந்தியா முழுவதும் எடுத்துச்செல்ல வேண்டும். அதை மீண்டும் மீண்டும் உறக்க சொல்ல வேண்டும். வரும் தேர்தலில் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும். இந்த தேர்தல் நமக்கு முக்கியம் மற்ற மாநிலங்களில் இல்லாத பல பண்பாடுகள் வளர்ச்சிகள் என அனைத்திலும் முன்னேற்றமடைந்த தமிழகத்தின் கொள்கைகள் கோட்பாடுகள் மற்ற மாநிலங்களுக்கும் எடுத்துச் செல்லும் வகையில் நம்முடைய பணிகள் அமைய வேண்டும். முதலமைச்சருக்கு அனைவரும் துணை நிற்க வேண்டும். என்று பேசினார்.
அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் வடமாநிலங்களில் இன்று வரை பெண்கள் எல்லா இடத்திலும் சமமாக அமர்ந்து இருக்க முடியாத நிலை உள்ளது அதே போல் ஜாதி வேறுபாடு உள்ளன. தமிழகத்தில் பெரியார் சொத்தில் சம உரிமை கொண்டுவந்து பல உரிமைகளை பெற்றுக்கொடுத்து உள்ளார். அனைத்து தரப்பினரும் அர்ச்சகராகலாம் என்ற உரிமையை திமுக கொடுத்துள்ளது. இதுபோன்று எல்லா துறைகளிலும் தமிழ்நாடு வளர்ச்சியடைந்துள்ளது. ஆனால் 10 ஆண்டுக்குள் அரசியல் கட்சியை ஆரம்பித்தவர்களுக்கு திமுக வரலாறு தெரியாமல் பேசி வருகின்றனர் என்றார்.
மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில் முதல்வராக தளபதி பொறுப்பேற்ற காலத்தில் தமிழகத்தில் விடிந்தால் உயிரோடு இருப்போமா என்ற உத்திரவாதம் இல்லாமல் கொரோனா இருந்த காலக்கட்டத்தில் அனைவரும் தடுப்பு ஊசி எடுத்துகொள்ள வேண்டும் என்பதை எடுத்துக்கூறி எல்லோருக்கும் முன் உதாரணமாக இருந்து முதல்வர் செலுத்தி கொண்டார். நிதி நெருக்கடி என பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியில் பல்வேறு சாதனைகளை செய்து முன்னேறி வருகிறோம். இந்தியாவிற்கு வழிகாட்டும் முதல்வராக வரும் காலத்தில் தளபதி பணியும் அமையவுள்ளது. அனைத்து தரப்பினரும் முதல்வருக்கு துணையாக இருக்க வேண்டும் என்று பேசினார்.
மாநாட்டில் இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ, திராவிட இயக்க தமிழர் பேரவை நிர்வாகிகள் உமா, சிங்கராயர், உமாபதி, செல்வராசு, ரவீசந்திரன், தமிழ்நாடு அ. இஸ்ஸாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மௌலவி.மன்சூர் காஷிஃபி, தமிழ்நாடு முஸ்ஸீம் முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் ஹாஜா கனி, சாமிதோப்பு மகாகுரு பாலபிரஜாபதி அடிகளார் உள்பட பலர் சிறப்புரையாற்றினார்கள். மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், துணைச்செயலாளர் கீதாமுருகேசன், பொதுக்குழு உறுப்பினர் ராஜா, மாவட்ட அணி அமைப்பாளர்கள் அந்தோணிஸ்டாலின், கஸ்தூரி தங்கம், மோகன்தாஸ் சாமுவேல், மாநகர அணி அமைப்பாளர் அருண்குமார், துணை அமைப்பாளர்கள் பால்ராஜ், பிக்அப் தனபால், வக்கீல் கிறிஸ்டோபர் விஜயராஜ், பகுதி செயலாளர்கள் நிர்மல்ராஜ், ராமகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதிகள் சக்திவேல், செந்தில்குமார், கவுன்சிலர்கள் சரவணக்குமார், பொன்னப்பன், ஜெயசீலி, மரியகீதா, ரெக்ஸின், அந்தோணிபிரகாஷ், விஜயகுமார், வட்டச்செயலாளர்கள் சுப்பையா, ரவீந்திரன், முக்கையா, சிங்கராஜ், கருப்பசாமி, மகளிர் அணி ரேவதி, சத்யா, பெல்லா, பார்வதி, சந்தனமாரி, பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் சூர்யா, மற்றும் பிரபாகர், லிங்கராஜா, மகேஸ்வரசிங், விடுதலை சிறுத்தைகட்சி மாவட்ட செயலாளர் அகமது இக்பால், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திராவிட இயக்கத் தமிழர் பேரவை மாநில இளைஞர் அணி செயலாளர் சந்தானம் நன்றியுரையாற்றினார்.

