தூத்துக்குடி
திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முக.ஸ்டாலினுக்கு வரும் 1ம் தேதி 70வது பிறந்தநாளையொட்டி தூத்துக்குடி ஆல்கன் டிரஸ்ட் சார்பில் மாநகராட்சி பகுதி முழுவதும் 1 மாத காலம் 5ஆயிரம் மரக்கன்றுகள் நடுவது என்று முடிவு செய்யப்பட்டு திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும் தூத்துக்குடி மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமி தலைமையில் குறிஞ்சிநகர் பகுதியில் முதலமைச்சர் வாழ்த்துக்களுடன் கூறிய மரக்கன்றுகள் நடும் விழாவை தொடங்கி வைத்தார்.
விழாவில் ஆல்கன் டிரஸ்ட் இயக்குனரும் வடக்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி அமைப்பாளரும் மாவட்ட அரசு வழக்கறிஞருமான மோகன்தாஸ் சாமுவேல், மாநகர திமுக துணைச்செயலாளரும் கவுன்சிலருமான கீதாமுருகேசன், தொழிலதிபர் மோகன், திமுக பிரமுகர்கள் பிரபாகர், மகேஸ்வரன் சிங், வேல்பாண்டி, ஆல்கன் டிரஸ்ட் உறுப்பினர் ஐயப்பன், ஜெயராஜ், மருதபெருமாள், கேசவன், அருண்குமார், ரீகன், மைக்கேல், கிறிஸ்டோபர், தினேஷ், மாரி, பிரசன்னா, உள்பட பலர் உள்ளனர்.

பின்னர் மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில் மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் தமிழக மக்களுக்காவும் தமிழக நலனுக்காகவும் இரவு பகல் பாராமல் பணியாற்றி உலக தமிழர்களின் ஒப்பற்ற தலைவர் கலைஞர் என்று தேசிய அளவில் உள்ள பல்வேறு கட்சி தலைவர்களும் பாராட்டினார்கள். அவரது வழியில் மிசா கொடுமைகளை எல்லாம் அனுபவித்து கழகத்திற்காக உழைத்து இன்று தமிழக முதலமைச்சராக பணியாற்றி வரும் எங்கள் கழக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாளை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கொண்டாடும் திருநாளாக அமைய இருப்பதையொட்டி தூத்துக்குடி மாநகரில் வரும் மார்ச் மாதம் முழுவதும் 5ஆயிரம் மரக்கன்றுகள் நட்டி தலைவரின் சாதனையை கொண்டு செல்லும் வகையில் நடப்படுகின்றன. அது மட்டுமின்றி பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட உள்ளோம் என்று தெரிவித்தார்.

