தூத்துக்குடியில் மினி மராத்தான் போட்டி நடைபெற்றது.
தூத்துக்குடி
ஜேசிஐ பியர்ல்சிட்டி குயின்பீஸ் லேடி மினி மராத்தானை ஷித்தான் என்ற பெயரில் நடைபெற்றது. ஹோலிகிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரி மாணவர்கள் 120 பேர் இதில் பங்கேற்ற மெகா மாரத்தான் போட்டி வஉசி கல்லூரியில் இருந்து தொடங்கியதை டாக்டர் ராஜேஸ்வரி கொடியசைத்து தொடங்கி வைத்தார். எம்.ஜி.ஆர் பூங்கா, விவிடி சிக்னல், ராஜாஜி பூங்கா, மாநகராட்சி அலுவலகம், காய்கறி மார்க்கெட், பழைய நகராட்சி அலுவலகம் முக்கிய சாலை வழியாக பழைய துறைமுகத்தை சென்றடைந்தது. போக்குவரத்து போலீசார் மாணவிகளுக்கு துவக்கத்தில் இருந்து இறுதி வரை வழிநடத்தி அழைத்துச் சென்றனர். முதல் பரிசை பிரைட்லின், இரண்டாம் பரிசை இந்துமதி, மூன்றாம் பரிசை ஜெயா ஆகியோர் பெற்றனர். வெற்றி பெற்ற முதல் மூன்று மாணவிகளுக்கு ரொக்க பரிசாக முறையாக 3000, 2000, 1000 வழங்கப்பட்டது. தொடர்ந்து வந்த 10 மாணவர்களுக்கு இசக்கிராஜ் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மண்டல அலுவலர் வில்சன் அமிர்தராஜ், மண்டல ஒருங்கிணைப்பாளர் முத்துராமலிங்கம், முகமது இப்ராகிம், சாலமன், பட்டயத் தலைவர் ஜெர்லின் தினகரன், துணைத் தலைவர் ரத்தினா பொன்ராஜா, திட்ட தலைவர் சுஜாதா, துணை திட்ட தலைவர் சத்யா சேகர், துணைத் தலைவர்கள் சுதா சாலமன், மதுமிதா, துணைத் தலைவர் அஜிதா பிரபு, மலர்விழி, உறுப்பினர்கள் பிரபா, நர்மதா, சுஜாதா, ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரி முதல்வர் ருபா இணை பேராசிரியர் மதுரவல்லி, பேராசிரியர் விசாகலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜேசிஐ பியர்ல் சிட்டி குயின் பீஸ் தலைவர் வக்கீல் சுபாசினி வில்சன், செயலாளர் ஆயிஷா இப்ராஹிம் ஆகியோர் செய்திருந்தனர்.

