தூத்துக்குடி பாரா மெடிக்கல் லேப் கல்வி மற்றும் நலச் சங்கத்தின் செயற்குழு கூட்டம் வாசன் ஐ கேர் மருத்துவமனையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் அபிராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் பாலமுருகன் முன்னிலை வைத்தார். மாநில மகளிர் அணி அமைப்பாளர் கலா காளிதாசன் பொதுக்குழுவில் கொடுக்கப்பட்ட 16 தீர்மானங்களையும் விளக்கி கூறினார். ரூ 3000 மாநில சங்கத்திற்கு தூத்துக்குடி மாவட்டம் சார்பாக வழங்கப்பட்டது. பசுமை திட்டம் சார்பாக 200 மரக்கன்றுகள் மார்ச் 13 ஆய்வக நுட்புனர் தினத்தை முன்னிட்டு நடுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எல்டிசிஎஸ் இரண்டு எண்ணம் வாங்குவது, கிரிக்கெட் விளையாடுவது, இந்த நான்கு பெரிய திட்டங்களுக்கும் இரண்டு நபர்களை தலைமை ஏற்க வைத்து செயல்படுவது என உள்ளிட்ட 16 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் பொருளாளர் கிறிஸ்துராஜ், மகளிர் அணியினர் டல்சி, தங்க புஷ்பம், பூரணி. ஷீபா சங்கீதா, திவ்யா மற்றும் பூராஜா, எட்வர்ட், பால் கிளின்டன், லிங்கசாமி, முத்துக்குமார், ஜெபசிங் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட அமைப்பாளர் மைக்கேல் பிரதாப் நன்றி கூறினார்.

