நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் பாங்கல் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு மக்கள் நேர்காணல் முகாமில் 167 பயனாளிகளுக்கு சுமார் ரூ.67 இலட்சத்து 91 ஆயிரத்து 072 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் வழங்கினார்.
நாகப்பட்டினம் பிப்ரவரி 22
நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் பாங்கல் ஊராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சிறப்பு மக்கள் நேர்காணல் முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் கீழ்வேளுர் சட்ட மன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி முன்னிலையில் இன்று நடைபெற்றது.
இம்முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் அரசின் திட்டங்கள் அனைத்தும் ஏழை எளிய மக்களின் பயன்பாட்டிற்காக மட்டுமே, மக்களைத் தேடி எல்லாம் எந்த விதமான பாகுபாடும் இல்லாமல் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் அரசும் அரசு அதிகாரிகளும் செயல்பட வேண்டும் என உத்தரவிட்டதற்கிணங்க அனைத்து திட்டங்களும் அனைத்து மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகின்றது.
தமிழக அரசானது பல்வேறு திட்டங்களை பொதுமக்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தி வருகிறது. அரசு அறிவிக்கும் திட்டங்கள், உதவிகளை பெற அறிந்துகொள்ள முடியாத நிலையில் உள்ள மக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திக்கும் ஒரு நிகழ்ச்சியே மக்கள் நேர்காணல் முகாமாகும். இதுபோன்ற அரசின் நல திட்டங்கள் மற்றும் உதவிகளை அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில் இம்முகாம் நடத்தப்படுகிறது.அவ்வாறு தமிழக அரசு அறிவிக்கும் எண்ணற்ற திட்டங்களை சரியான நபர்களுக்கு சரியான நேரத்தில் சென்றடைய வேண்டும். அப்படி சென்றடைந்தால் அத்திட்டம் வெற்றிபெற்றது என அர்த்தம். மேலும், உண்மையான கஷ்டத்தில் இருக்ககூடிய மக்களுக்கு உதவும் வகையில் மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் செயல்படுகிறது. மேலும் நம் மாவட்டத்திற்கு 10 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதில் சில நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டடங்கள் திறக்கப்பட்டும் சில நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டடங்கள் கட்டபட்டும் வருகிறது. ஊராட்சிகளுக்கு உட்கட்டமைப்பு வசதிகளான வீடு கட்டுதல், நீர் தேக்க தொட்டி அமைத்தல், சாலை அமைத்தல், மயான கொட்டகையின் கூரை அமைக்கும் பணிகள், பள்ளி கட்டடம் சீரமைப்பு மற்றும் கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டுதல், அங்கன்வாடி, நியாய விலைக் கடை, ஊராட்சி செயலாக்க கட்டடம் கட்டும் பணிகள் போன்றவை நடைபெற்று வருகிறது. மேலும் 15 மான்ய நிதியின் கீழ் ரூ.1752 கோடி மதிப்பீட்டில் வீட்டிற்கு வீடு குடிநீர் இணைப்பு வழங்க பணிகள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வருகிறது.
தொடர்ந்து பெற்றோர்கள் தங்களது குழந்தைகளான மகன் மற்றும் மகள் போதை பொருட்கள், தொடுதிரை செல்போன், இரு சக்கர வாகனங்கள் பயன்படுத்துவது போன்ற தவறான விஷயங்களில் ஈடுபடுவதை அவ்வப்போது கண்காணித்து, அறிவுரைகளை அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.
இம்முகாமில் மாற்றுத்திறனாளி நலத் சார்பில் 05 பயனாளிகளுக்கு ரூ.85,000 மதிப்பீட்டில் இயற்கை மரணம் ஈமச்சடங்கு நலவாரிய உதவித்தொகையினையும், சமூகப் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 22 பயனாளிகளுக்கு மாதம் ரூ.1000 எனவும் 8 பயனாளிகளுக்கு மாதம் ரூ.1500 எனவும் 12 மாதத்திற்கு ரூ.4,08,000 மதிப்பீட்டில் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்ட முதியோர் உதவித்தொகை, கணவரால் கைவிடப்பட்டோர் உதவிதொகை, விதவை உதவிதொகை, மாற்றுத்திறனாளி உதவிதொகை போன்றவைகளையும், வருவாய் துறை சார்பில் 105 பயனாளிகளுக்கு ரூ.62,66,020 மதிப்பீட்டில் இலவச வீட்டுமனை பட்டாவையும், 1 பயனாளிக்கு பட்டா மாற்றத்திற்கான ஆணை மற்றும் 5 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டையினையும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 01 பயனாளிக்கு ரூ.6,000 மதிப்பீட்டில் பித்தளை தேய்ப்பு பெட்டி, வேளாண்மைத்துறை சார்பில் 05 பயனாளிகளுக்கு ரூ.8,032 மதிப்பீட்டில் இடுபொருள் தொகுப்பு, தென்னங்கன்று, ஸ்பிரேயர், தார்பாலின் போன்றவைகளையும், தோட்டக்கலைத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.17,620 மதிப்பீட்டில் மா கன்று, காய்கறி மற்றும் கீரை விதைகள் போன்றவைகளையும், கால்நடை பராமரிப்பு துறை சார்பில் 05 பயனாளிகளுக்கு ரூ.400 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 167 பயனாளிகளுக்கு சுமார் ரூ.67 இலட்சத்து 91 ஆயிரத்து 072 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வி;.ஷகிலா தலைஞாயிறு ஒன்றியகுழு தலைவர் ஆர்.ஜி.தமிழரசி, தலைஞாயிறு ஆத்மா வட்டார குழுத்தலைவர் மகா.குமார், ஊராட்சி மன்ற தலைவர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டாட்சியர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் உட்பட பொது மக்கள் திரளாக கலந்துக்கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

