தூத்துக்குடி,பிப்,22
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் போட்டியிடுகிறார்.
இளங்கோவனை ஆதரித்து, தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா உள்பட பல நிர்வாகிகள் வாக்குசேகரித்து வருகின்றனர். இந்நிலையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா வழிகாட்டுதலின் பெயரில்
தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு சங்க தலைவருமான சரவணக்குமார், திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் படைசூழ ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி 37வது வார்டுக்குட்பட்ட கருங்கல் பாளையம், ஜானகியம்மாள் லே-அவுட் பகுதிகளில் வீதி வீதியாக நடந்து சென்று பொதுமக்கள், வியாபாரிகள், இளைஞர்கள் மகளிர்கள், புதிய வாக்காளர்கள் என அனைத்து தரப்பினரிடமும் நேரடியாக சென்று திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அரசின் புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் கல்லூரி மாணவிகளுக்கு ஆயிரம் ஊக்க தொகை, அரசு பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம், மகளிர் சுய உதவிக்குழு கடன் உதவி, சொத்தில் பெண்களுக்கு சம உரிமை, உள்ளாட்சியில் பெண்களுக்கு 50 சதவீதம், வேலை வாய்ப்பில் 30 சதவீதம் என பெண்களுக்கான எண்ணற்ற திட்டங்கள், சாதனைகள், நலத்திட்டங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வாக்காளர்களுக்கு வழங்கினார். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அவருடன் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக ஆதிதிராவிடர் நல அணி அமைப்பாளர்
டிடிசி ராஜேந்திரன், தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, வழக்கறிஞரணி துணை அமைப்பாளர் ரகுராமன், வர்த்தக அணி துணை அமைப்பாளரும் மாநகராட்சி கவுன்சிலருமான ரெங்கசாமி, பகுதி செயலாளர் சிவக்குமார், ஒன்றிய கவுன்சிலர் தொம்மை சேவியர், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, சேசுராஜா, முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார், கௌதம் உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு எம். ஆத்தி முத்து

