வேதாரணியம் பிப்ரவரி 21
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரணியம் கோட்டாட்சியர் அலுவலகம் எதிரில் நாகை திருவாரூர் மாவட்ட குடிக்காணி மற்றும் குத்தகை சாகுபடி தாரர்கள் விவசாயம் பாதுகாப்பு சங்கம் இணைந்து நடத்தும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நாகை திருவாரூர் மாவட்ட தலைவர் எஸ். பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது.
சங்க பொறுப்பாளர்களும் மற்றும் உறுப்பினர்களும் முன்னிலை வகித்தனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.வி. ராஜேந்திரன்,
வேதாரணியம் வர்த்தக சங்கத் தலைவர் மற்றும் மாநில துணைத்தலைவர் எஸ். எஸ்.தென்னரசு,
சிபிஐ மாவட்ட செயலாளர் சிவகுரு பாண்டியன்,
அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆர். கிரிதரன் ,விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் எம். ஏ. செங்குட்டுவன்
மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளாக. தமிழக அரசின் அறநிலையத்துறை சில வருடங்களாக பல நெருக்கடியை கொடுத்து வருகிறது. மேலும் பல நூறு
ஆண்டு காலம் காலமாக வம்சாவழியாக வாழ்ந்து வரும் நாங்கள் எவ்வாறு ஆக்கிரமிப்பு தாரர்கள் ஆவோம். திருக்கோயில் அலுவலர்கள் வரிவசூல் செய்யாமல் நாங்கள் வரி கட்டுவதில்லை என்று சொல்லி எங்கள் மீது நில ஆக்கிரமிப்பு சட்ட எண் 78 போடப்பட்டு மேற்படி வழக்கு இணை ஆணையர் நீதிமன்றத்திலே நடைபெறுகிறது. அவர்கள் நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கில் எங்களுக்கு எவ்வாறு நியாயம் கிடைக்கும். ஆகவே மேற்படி வழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற வேண்டும்.


மேலும் எங்களை ஆக்கிரமிப்பு தாரர்கள் என்று கூறி எங்கள் வீடு மற்றும் நிலத்தில் இருந்து அகற்ற நினைக்கின்றனர். மக்கள் குடியிருக்கும் மனைகளுக்கு கிஸ்தி மட்டுமே செலுத்தப்பட்டு வந்த நிலையில் மனை வாடகை நிர்ணயித்து 2001 ஆம் ஆண்டு முதல் நிலுவைத் தொகையுடன் செலுத்தவும் விவசாய நிலங்களுக்கு கிஸ்தி மட்டுமே செலுத்தி வந்த நிலையில் பாதிவார குத்தகை தொகையை நிலுவை தொகையுடன் செலுத்தவும் வேதாரணியம் நகரத்துக்குட்பட்ட பட்டன மனைகளுக்கு நடைமுறையில் இருந்த பத்திரப்பதிவு முறையை தடை செய்து மேற்படி நிலங்களில் குடியிருக்கும் மக்களுக்கு வாடகை முறையை அமல்படுத்த அறநிலையத்துறை நெருக்கடி கொடுத்து வருகிறது. இதனால் ஒவ்வொரு விவசாயியும் நிலுவையாக பல லட்ச ரூபாய் செலுத்த வேண்டி வருகிறது. அவ்வாறு விவசாயிகளால் செலுத்த இயலாது.
இதனால் அரசின் சலுகை மூலம் கட்டக்கூடிய வீடுகள், விவசாய மானிய பொருட்கள், வீட்டு கடன் போன்ற எந்த சலுகையும் பெற முடியவில்லை.மேற்கண்ட குடியிருப்பு பகுதி மற்றும் விவசாய நிலங்கள் யாவும் 1963ஆம் ஆண்டு தமிழக அரசின் இனாம் ஒழிப்பு அபாலிஷன் ஆக்ட் 26 மற்றும் 30 இன் படி விடுவிக்கப்பட்ட கிராமங்கள் ஆகும். இச்சட்டத்தால் பல கிராமங்களுக்கு 1973 ஆம் ஆண்டு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் தமிழக முதல்வராக இருந்த காலத்தில் சில நூறு நபருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள கிராமங்களுக்கும் அதன் அடிப்படையில் பட்டா வழங்க ஆவணம் செய்ய வேண்டுகிறோம். பட்டா இல்லாமல் வாழும் குடிமக்களுக்கு குடிமனை பட்டா வழங்க வேண்டுமாயும் எஞ்சிய நிலத்திற்கு வாடகை முறையை அமுல்படுத்தாமல் பழைய நடைமுறையில் நிலவரி வசூல் செய்ய வேண்டுமாயும் மேற்கண்ட நிலங்களில் வாழும் சுமார் 60,000 குடும்பங்கள் சார்பாகவும் இச்சங்கத்தின் 3600 உறுப்பினர்கள் சார்பாகவும் கேட்டுக் கொள்வதாக கூறப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர். போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

