வேதாரணியம் பிப்ரவரி 20
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆதனூர் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட அரசு நேரடி நெல்கொள்முதல் நிலைய புதிய கட்டிடம் திறக்கப்பட்டது. ரூ.28.94 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட இந்த கட்டிட திறப்புவிழா நிகழ்ச்சி
ஊராட்சிமன்ற தலைவர் சந்திரா சுப்ரமணியன் தலைமையில் நடைபெற்றது. வட்டார விவசாய குழு தலைவரும், ஆத்மா திட்ட குழு தலைவரும் திமுக தெற்கு ஒன்றிய செயலாளருமான சதாசிவம் மற்றும் வேதாரண்யம் நகர்மன்ற தலைவரும் திமுக நகர செயலாளருமான மா.மீ.புகழேந்தி புதிதாக கட்டப்பட நேரடி நெல் கொள்முதல் கட்டிடத்தை திறந்து வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் விவசாயிகள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கரன், ராஜூ, திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் உமா.செந்தாமரைச்செல்வன், ஊராட்சி மன்ற துணை தலைவர் சிவக்குமார், ஒன்றிய கவுன்சிலர் தனபால் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள், பொது மக்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். முன்னதாக மரக்கன்றுகள் நடப்பட்டு நெல் தூற்றும் இயந்திரம் மூலம் சாக்கு மூட்டைகளில் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. நிகழ்ச்சியின் முடிவில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய பட்டியல் எழுத்தர் சுதந்திரமணி நன்றி கூறினார்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

