நாகப்பட்டினம் பிப்ரவரி 20
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில மக்கள் குறைதீர்;க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.
வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மொத்தம் 186 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.அதனைத்தொடர்ந்து வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வேதாரண்யம் வட்டம், தென்னடார் மேலக்காடு கிராமத்தை சேர்ந்த ஆர்.ராசாத்தி த/பெ ரெத்தினசாமி என்பவருக்கு மாவட்ட ஆட்சியரின் தன்விருப்ப நிதியிலிருந்து தையல் இயந்திரத்தினையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் திருக்குவளை வட்டம், வேட்டைக்காரனிருப்பு சடையன்காடு கிராமத்தை சேர்ந்த எழில்ராஜா த/பெ காளிமுத்து என்ற மாற்றுத்திறனாளிக்கு ரூ. 9,050 மதிப்பீட்டில் மூன்று சக்கர சைக்கிளையும், வருவாய்த்துறை சார்பில் வேதாரண்யம் வட்டம், ஆயக்காரன்புலம் 2-ஆம் சேத்தி கிராமத்தை சேர்ந்த சரோஜா க/பெ பாஸ்கரன் என்பவருக்கு இலவச வீட்டுமனை பட்டா மற்றும் நாகப்பட்டினம் வட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றியம் கோட்டப்பாடி கிராமத்தைச் சேர்ந்த த.முருகேசன் என்பவருக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவி தொகை காண ஆணையினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.


இந்திய குழந்தைகள் நல சங்கம் தமிழ்நாடு கிளை சார்பில் பள்ளி மாணவ-மாணவியர்களுக்கு நடைபெற்ற மாவட்ட அளவில் வர்ணம் தீட்டுதல் போட்டியில் வெற்றி பெற்று தேசிய அளவிலான வர்ணம் தீட்டுதல் போட்டியில் கலந்துகொண்ட மாணவ-மாணவியர்களுக்கு சான்றிதழ்களையும், தேசிய அளவிலான வர்ணம் தீட்டுதல் போட்டியில் முதலிடம் பிடித்த சிவப்பு குழு காது கேளாதோர் பிரிவில் வேளாங்கண்ணி கிறிஸ்துராஜா சிறப்பு உயர்நிலைப்பள்ளியை சேர்ந்த செல்வன் ஏ.சக்திமுருகன் மற்றும் மூன்றாமிடம் பிடித்த செல்வன் ஆர்.சாய்ராம் ஆகிய மாணவர்களை பாராட்டி பரிசு தொகையினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வி.ஷகிலா, சமூக பாதுகாப்பு துணை ஆட்சியர் கு.ராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சு.ராமன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

