தூத்துக்குடி
ஜேசிஐ பியர்ல் சிட்டி குயின் பீஸ் ஹோலிகிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் இரண்டு நாட்கள் வாழ்க்கை திறன் முகாம் நடைபெற்றது. இந்த இரண்டு நாள் திறன் முகாமை ஜேசிஐ செனட்டர் கார்த்திக் துவக்கி வைத்தார். ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் தலைமை ஆசிரியர் ரூபா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
முதல்நாள் மண்டல பயிற்சியாளர்கள் சரவணகுமார், கவுசல்யா, பட்டயத் தலைவர் ஜெர்லின் தினகரன், ஜேசிஐ பேர்ல்சிட்டி குயின்பீஸ் தலைவர் வக்கீல் சுபாசினி ஆகியோர் பல்வேறு தலைப்புகளின் கீழ் லைஃப் ஸ்கில் பயிற்சியை எடுத்தனர்.
இரண்டாம் நாள் இந்தியா போஸ்ட் வணிக நிருபர் ஆயிஷா இப்ராஹிம், ஹைடெக் பியூட்டி பார்லர் அஜிதா பிரபு, மண்டல துணைத் தலைவர் அன்பு தனபாலன், தற்காலிக மண்டலப் பயிற்சியாளர் அஜித்குமார் பல்வேறு தலைப்புகளின் கீழ் பயிற்சி கொடுத்தனர். சுஹா பிரைடல்ஸ் சரஸ்வதி மற்றும் அவரது மகள் சூப்பர் சிங்கர் ஜூனியர் ஸ்ரீஹரிணி ஆகியோரின் கலாச்சார நிகழ்வு பாடலுடன் இரண்டு நாட்கள் வாழ்க்கை திறன் முகாம் நிறைவு பெற்றது. நிகழ்ச்சியில் துணைத் தலைவர் சுதா சாலமன் மற்றும் ஜேசிஐ குயின்பீஸ் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திட்ட தலைவர்களான ரத்தினா பொன்ராஜா, முபாராஷா ஆகியோர் செய்திருந்தனர்.

