தூத்துக்குடி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் போட்டியிடுகிறார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் 51வது வார்டுக்குட்பட்ட அசோகபுரி, மணல்மேடு, பொதுமக்களிடையே வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் பெரியார் பெண்களுக்கு சொத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதை திமுக ஆட்சியில் முதலமைச்சராக இருந்த கலைஞர் நிறைவேற்றி கொடுத்தார். அதே போல் பெண்களின் வாழ்வு முன்னேற மகளிர் சுயஉதவி குழு ஆரம்பிக்கப்பட்டது. உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 33சதவீதம் வழங்கப்பட்டு 50 சதவீதமாக தற்போது உள்ளது அதே போல் அரசு வேலைவாய்ப்பு 30 சதவீதம் பெண்களுக்கு வழங்கப்படுகிறது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற நடைமுறையை சட்டமாக்கியது திமுக கடந்த 10 ஆண்டுகளில் தமிழகம் பின்னோக்கி கிடந்தது. திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பதவியேற்ற 21 மாத காலத்தில் அனைத்து தரப்பினரும் பயனடையும் வகையில் என்னற்ற பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்தியாவில் சிறந்த முதலமைச்சர் என்ற பெருமையில் பல்வேறு ஊடக நிறுவனங்கள் எடுத்த கருத்துகணிப்பு தகவல்களில் அறிவித்துள்ளனர். ஆனால் முதலமைச்சர் நான் சிறந்த முதலமைச்சர் என்று இருப்பதைவிட எல்லா துறைகளிலும் தமிழகம் முதல் மாநிலமாக இருக்க வேண்டும். என்பது தான் என்னுடைய லட்சியம் என்று பணியாற்றி வருகிறார். தொழில்துறையை உருவாக்கி அதன் மூலம் வேலைவாய்ப்பை இளைஞர்களுக்கு வழங்கி வருகிறார். ஒன்று முதல் ஐந்து வரை படிக்கும் பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கி உலகத்திற்கே வழிகாட்டியாக விளங்குகிறார். முதலமைச்சர் என்னற்ற பல்வேறு திட்டங்களை உருவாக்கி அனைத்து தரப்பு மக்களுக்கு சென்றடைய வேண்டும். என்ற எண்ணத்தில் பணியாற்றி வரும் முதலமைச்சர் தேர்தலில் கொடுத்த வாக்குறுதி மட்டுமின்றி சொல்லாதவற்றையும் நிறைவேற்றி வருகிறார். பொது வாழ்வில் தன்னையே அற்பணித்து கொண்டு முழுமையாக பணியாற்றும் இந்த தொகுதியின் வேட்பாளர் இளங்கோவனுக்கு ஓட்டு மொத்தமாக அனைவரும் கைசின்னத்தில் வாக்களித்து முதலமைச்சரின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் அதிமுக டெபாசிட் இழக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
ஓன்றிய செயலாளர் நவநீத கண்ணன், மாவட்ட கவுன்சிலர் மிக்கேல்நவமணி, 51வது வார்டு கவுன்சிலர் விஜயலட்சுமி, மாவட்ட பிரதிநிதி மணி, மற்றும் கருணா, அல்பட், உள்ளிட்ட கூட்டணி கட்சியை சார்ந்தவர்கள் உடன் சென்றனர்.

