தூத்துக்குடி.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வருகிற மார்ச் 1-ம் தேதி வருவதையொட்டி, அதற்கு முன்னோட்டமாக தூத்துக்குடியில் 250 ஆட்டோவில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து ஸ்டிக்கர் ஒட்டி கொண்டாடப்பட்டது.
ஆட்டோக்களில் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர் மூலம் தூத்துக்குடி மாநகர் மற்றும் புறநகர் உள்பட மாவட்டம் ஆட்டோக்கள் சுற்றி வருவதன் மூலம் அனைத்து தரப்பு மக்களிடையே திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்துச் செய்தி பட்டித்தொட்டியெங்கும் பரவ துவங்கியுள்ளது.
முன்னதாக, நலிவடைந்த ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
மாநில திமுக இளைஞர் அணி துணை செயலாளர் வக்கீல் ஜோயல் வழிகாட்டுதலின் தாம்பரம் விமல்; முழு ஏற்பாட்டில் நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மெல்டஸ், கார்த்திக், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற தூத்துக்குடி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் என்.பால்துரை பொருளாளர் சேக்முகமது, துணைச் செயலாளர் காளிஸ்வரன், துணை தலைவர் நடராஜ், தளபதி முருகன், துணை செயலாளர் புதுக்கோட்டை சிவமுருகன், மாநகர டினோ, முத்தரசன், செந்தில், விமல், ஷகிலன், ஆனந்த், ஜூடு உள்பட ஏராளமான திமுக இளைஞரணி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

