தூத்துக்குடி
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் போட்டியிடுகிறார்.
இளங்கோவனை ஆதரித்து, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆகியோர் 51-வது வார்டு பகுதியான அசோகபுரி, மணல்மேடு போன்ற பகுதிகளில் பொதுமக்களிடையே வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்தனர்.
வாக்காளர்கள் மத்தியில் அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில்: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம், புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் கல்லூரி மாணவிகளுக்கு ஆயிரம் ஊக்க தொகை, திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மகளிர் சுய உதவிக்குழு மீண்டும் ஆட்சிக்கு வந்த போது மேலும் பல குழுக்களை உருவாக்கும் வகையில் கடன் உதவி வழங்கி ஊக்குவித்து வருகிறார். சொத்தில் பெண்களுக்கு சம உரிமை உள்ளாட்சியில் பெண்களுக்கு 50 சதவீதம் வேலை வாய்ப்பில் 30 சதவீதம் என கலைஞர் காலந்தொட்டு தற்போது முதலமைச்சர் ஆட்சியில் பெண்களுக்கான எண்ணற்ற திட்டங்கள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அனைவரும் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி முழுவதும் திமுக ஆட்சியின் சாதனைகளை துண்டு பிரசுரம் வழங்க வேண்டும்.

ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய திட்டப்பணிகளுக்கு உரிய நிதிகளையும், தமிழ்நாட்டிலிருந்து பெறப்படும் ஜிஎஸ்டி பங்களிப்பையும் முறையாக வழங்காமல் தமிழ்நாட்டையும் தமிழ்நாட்டு மக்களையும் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. வேலைவாய்ப்பு உருவாக்கிக் கொடுக்காமல் இளைஞர்களை பிரதமர் மோடி, அமைச்சர் அமித்ஷா கூட்டணி பக்கடா விற்று பிழைத்துக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார்கள். நடுத்தர ஏழை மக்களை பற்றி சிந்திக்காமல், அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டும் சலுகைகளை வழங்கி வங்கிக் கடனும் வழங்கப்படுகிறது. ஏழை, எளியவர்களுக்கு அது எட்டாக் கனியாக இருந்து வருகிறது. வாங்கிய கடனை சரியாக கட்டவில்லையென்றால் மற்றவர்களை எல்லாம் மிரட்டுவதும், சொத்துக்களை பறிமுதல் செய்வதும் வாடிக்கையாக உள்ளது. தொழிலதிபர்கள் வாங்கிய கடனையெல்லாம் வராக்கடனாக தள்ளுபடி செய்கிறது. ஒன்பது வருட பாஜக ஆட்சியில் தமிழகத்தை புறக்கணிப்பது மட்டுமின்றி நம்முடைய உரிமைகளையும், தட்டிப் பறிக்கின்றனர். ஜெயலலிதா இருந்த காலத்தில் தேவையில்லாத திட்டத்தை எதிர்த்தார். ஆனால், எடப்பாடி ஒன்றிய அரசு கூறும் அனைத்திற்கும் ஜால்ரா அடித்துக் கொண்டு தலையாட்டி பொம்மையாக இருந்தார். இப்படிப்பட்டவர்கள் எல்லாம் இன்று தமிழ்நாடு முதலமைச்சரைப் பற்றி பேச அருகதை கிடையாது. ஊர்ந்தே சென்று காலைப்பிடித்து பதவிக்கு வந்தது யார்? என்று நாட்டு மக்களுக்குத் தெரியும். துரோகத்தின் மறுபெயர் தான் எடப்பாடி என்று அதிமுகவினரே பேசுகின்றனர். அனைவரும் கை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அவருடன் தூத்துக்குடி மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணைச்செயலாளர்; கனகராஜ், ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், காசிவிஸ்வநாதன், கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், சுரேஷ்குமார், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் சிவக்குமார் என்ற செல்வின், வட்டசெயலாளர்கள் கதிரேசன், பாலு, ரவீந்திரன், வட்டப்பிரதிநிதிகள் பாஸ்கர், ராதா, போல்பேட்டை பகுதி இளைஞர் அணி துணை அமைப்பாளர் பொன்னுச்சாமி, மாமன்ற உறுப்பினர் விஜயலட்சுமி மணி, மாவட்ட பிரதிநிதி மணி, மற்றும் கருணா, அல்பட் உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

