நாகப்பட்டினம் பிப்ரவரி 18
நாகப்பட்டினம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வங்கி கடனுதவி வழங்கும் முகாமில் 48 பயனாளிகளுக்கு ரூ. 3 கோடியே 60 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு கடனுதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் வழங்கினார். நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.முகமது ஷா நவாஸ் கீழ்வேளுர் சட்ட மன்ற உறுப்பினர் வி.பி. நாகை மாலி ஆகியோர் உடன் உள்ளார்கள்.
இம்முகாமில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தாவது:
வங்கியாளர்கள் சுய உதவி குழுக்களுக்கு, தனிநபர் தொழில் செய்வதற்க்கும் அதிக அளவில் கடன் வழங்க வேண்டுமென்றும்,மாவட்டதொழில் மையம், தாட்கோ மூலம் தொழில் செய்ய வரும் நபர்களுக்கு வங்கியாளர்கள் முக்கியதுவம் கொடுத்து கடன்களை விரைத்து வழங்க வேண்டுமென்றும், நபார்டு வங்கி மூலம் விவசாயம், மீன்வளம் போன்ற பல்வேறு கடன் திட்டங்கள் செயல்படுத்தபட்டு வருகின்றது. மேலும் தொழில் முனைவோர்களை கண்டறிந்து வங்கிகள் கடன் கொடுத்து மாவட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் வங்கிகளின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உதவும் வகையில் வாடிக்கையாளர்கள் செயல்படவேண்டும் எனவும், வங்கிகள் மூலம் பெறப்பட்ட கடன்களை உரிய கால தவணை செலுத்தி நன்மதிப்பை பெற்று மீண்டும் அதிகப்படியான கடன் பெறும் வகையில் செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இந்த கடனுதவி வழங்கும் முகாமில் தனிநபர் கடன், மகளிர் சுய உதவி குழு கடன், வீட்டுக் கடன், கல்விக் கடன், விவசாய கடன்களையும், தட்கோ கடன், மாவட்ட தொழில் மையம் மூலமான கடன் மற்றும் தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டம் சார்பில் தலைமகள் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு வணிக விரிவாக்க நிதிக்கான காசோலை போன்ற கடன் உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் வழங்கினார். இந்த கடனுதவி மேளாவில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மாவட்ட முன்னோடி மேலாளர் க.செந்தில்குமார், முதன்மை மேலாளர் பரமேஸ்வர் மகானா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார், வங்கி மேலாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய்
மச்சோடா.

